search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகள்
    X

    பொது இடங்களில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க முறைகள்

    நாம் அனைவரும் தினமும் கடைபிடிக்க வேண்டிய அருங்குணங்கள் பல உள்ளன. ஒழுக்கம், நாணயம், நேர்மை, பிறருக்கு ஊறு செய்யாமல் இருத்தல் என அவற்றை அடுக்கி கொண்டே போகலாம்.
    நாம் அனைவரும் தினமும் கடைபிடிக்க வேண்டிய அருங்குணங்கள் பல உள்ளன. ஒழுக்கம், நாணயம், நேர்மை, மற்றவர்களுக்கு நன்மை செய்தல், பிறருக்கு ஊறு செய்யாமல் இருத்தல் என அவற்றை அடுக்கி கொண்டே போகலாம்.

    மிடுக்காக உடை அணிவது மட்டும் ஒழுக்கமாகி விடாது. அன்றாடம் நம் செயல்களில் ஒழுக்கம் மிளிர வேண்டும். மாணவர்கள் சிறு வயதில் இருந்தே எங்கு, எப்படி செயல்பட வேண்டும்? என்பதை புரிந்து நடக்க வேண்டும். அதற்கான சில குறிப்புகள்....

    சாலையில்....

    * ஹெல்மெட் அணிந்து கொண்டுதான் இரு சக்கர வாகனம் ஓட்ட வேண்டும்.

    * குறியிட்ட இடங்களில்தான் விதிகளுக்கு உட்பட்டு சாலையை கடக்க வேண்டும்.

    * சாலை ஓரத்தில் குப்பைகளை கொட்டக் கூடாது

    * சாலை ஓரத்தில் விளையாடக்கூடாது

    * செல்போன் பேசியபடி வாகனங்களை இயக்குவது, கவனமில்லாமல் செல்வது, அதிவேகத்தில் செல்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இத்தகைய செயல்களால்தான் அனேக விபத்துகள் நடைபெறுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

    * பாதசாரிகள் நடந்து செல்வதற்கான பாதையில், போக்குவரத்து கட்டளைக்கு ஏற்ப நடந்து செல்ல வேண்டும். பாதசாரிகள் கடக்கும்போது வாகனத்தை குறுக்கே ஓட்டக்கூடாது.



    * சாலைக் குறுக்கீட்டையோ சாலைச் சந்திப்பையோ, பயணிகள் கடக்கும் இடத்தையோ, திருப்பத்தையோ நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தை குறைத்து ஆபத்து நேராத முறையில் சாலையை கடக்க வேண்டும்.

    * வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் ஆட்களை ஏற்றி செல்லக்கூடாது.

    * ஆபத்து விளைவிக்கும்படி பொருட்களை ஏற்றிச்செல்லக்கூடாது.

    * வாகனங்களில் வெடிக்கக்கூடிய, எளிதில் தீப்பற்றக்கூடிய, ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.

    பயணங்களின் போது...

    * முதியோர் ஊனமுற்றோருக்கான இடத்தில் அமரக்கூடாது.

    * இருக்கைகளையோ, விளக்குகளையோ சேதப்படுத்தக்கூடாது.

    * பஸ், ரெயில்களில் செல்லும்போது ஓடி ஏறவோ, இறங்கவோ கூடாது.
    Next Story
    ×