search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பரிசுப்பொருளை தேர்ந்து எடுப்பது எப்படி?
    X

    பரிசுப்பொருளை தேர்ந்து எடுப்பது எப்படி?

    விழாக்களின் போதும், சிறப்பு தினங்களின்போதும் நண்பர்கள், குடும்பத்தினருக்கு பரிசுப்பொருள் அல்லது நினைவுப்பொருள் வழங்கும் போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் உள்ளன.
    விழாக்களின் போதும், சிறப்பு தினங்களின்போதும் நண்பர்கள், குடும்பத்தினர் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்வது வழக்கம். அவ்வாறு பரிசுப்பொருள் அல்லது நினைவுப்பொருள் வழங்கும் போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகள் உள்ளன. அவை என்ன என்று பார்ப்போம்...

    பரிசுப்பொருள் என்பது நமது அன்பை வெளிக்காட்டும் ஒரு அடையாளச்சின்னம். அது நமது பண பலத்தையோ, ஆடம்பரத்தையோ வெளிக்காட்டும் அடையாளம் அல்ல. எனவே உங்கள் பட்ஜெட் அல்லது பரிசுக்கான செலவு இலக்கு எவ்வளவு என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். உங்களால் எவ்வளவு செலவு செய்யமுடியும் என்பதைப்பொருத்து, அந்த மதிப்புக்கு ஏற்ப பரிசுப்பொருட்களை வாங்குங்கள். சிலர் தங்களது பெருமையை வெளிப்படுத்த கடன் வாங்கியாவது தங்களது சக்திக்கு மீறி செலவு செய்ய வேண்டும் என்பார்கள். இது தவறு.

    நீங்கள் யாருக்கு பரிசளிக்கப்போகிறீர்களோ அவர்களது விருப்பங்கள், எந்த துறையில் அவருக்கு ஆர்வம் அதிகம் என்பது போன்றவற்றை அறிந்து கொள்ளுங்கள். அதற்கு ஏற்ப நீங்கள் தேர்ந்து எடுக்கும் பரிசுப்பொருள் அமைவது சிறப்பு. அப்போது தான் அந்தப்பரிசுப்பொருள் அவருக்கு பயன்தருவதாக இருக்கும்.

    பரிசுப்பொருட்களை பத்திரமாக அட்டைப்பெட்டியில் அடைத்து, அழகிய வண்ண காகிதங்களால் அலங்கரித்து கொடுப்பது சிறப்பு.



    எந்த பரிசுப்பொருளையும், உரிய காலத்தில், உரிய நேரத்தில் கொடுப்பது தான் சிறந்தது. கால தாமதமாக கொடுக்கும் பரிசுப்பொருளுக்கு மதிப்பு இருக்காது.

    பரிசுப்பொருளை கொடுக்கும் முன்பு அதில் விலைப்பட்டியல் இருந்தால் அதை அகற்றி விட வேண்டும்.

    பரிசுப்பொருளுடன் சிறிய வாழ்த்து கவிதை அல்லது வாழ்த்து குறிப்பு இணைத்து அனுப்புவது இருவருக்கும் இடையே உள்ள நெருக்கத்தை அதிகரிக்கும்.

    பரிசுப்பொருளைக்கொடுக்கும் போது அதில் என்ன இருக்கிறது என்பதையோ, அதை மிகவும் சிரமப்பட்டு தேடிக்கண்டுபிடித்து வாங்கினேன் என்பது போன்ற சுய தம்பட்டம் அடிக்கும் விஷயங்களை சொல்லக் கூடாது.

    உங்களுக்கு யாராவது பரிசளித்தால் மறக்காமல் உடனே நன்றி தெரிவிக்க வேண்டும்.

    சிலர் தங்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுப்பொருளின் விலை என்ன? என்று விசாரிப்பது வழக்கம். இது தவறாகும். மேலும் சிலர் தங்களுக்கு பரிசுப்பொருள் பிடிக்கவில்லை என்பதை பரிசளித்தவரிடமே நேரடியாக சொல்வதுண்டு. இதுவும் தவறாகும். எந்த ஒரு பரிசையும், பாராட்டையும் மகிழ்ச்சியுடன், மனநிறைவுடன் பெற்றுக்கொள்வது தான் சிறந்ததாகும்.
    Next Story
    ×