search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முதன் முதலாக கார் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை...
    X

    முதன் முதலாக கார் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டியவை...

    குடும்பத்தாரின் விருப்பத்திற்காக புதியதாக கார் வாங்க முடிவெடுத்து ‘ஷோ-ரூமுக்கு’ செல்வதற்கு முன்னர் கீழ்க்கண்ட விஷயங்களை கவனித்துக்கொள்ளுங்கள்.
    புதுக்கார் வாங்குவதற்கு முன்பு, ‘பட்ஜெட்’ முதல் ‘கார் லோன்’ பெறுவது வரை பல்வேறு நடைமுறைகளை அனுசரித்து குடும்ப ரீதியான முடிவுகள் எடுக்கப்படும். முடிவுகள் புது காராக மாறி வீட்டு வாசலில் நிற்கும்போது குடும்பத்தார்களின் உற்சாகம் களைகட்டும். புதியதாக கார் வாங்க முடிவெடுத்து ‘ஷோ-ரூமுக்கு’ செல்வதற்கு முன்னர் கீழ்க்கண்ட விஷயங்களை கவனித்துக்கொள்ளுங்கள்.

    * ‘பட்ஜெட்’ மற்றும் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ற மாடல் தேர்வு முக்கியம். 4 பேர் கொண்ட குடும்பத்திற்கு ‘ஹாட்ச்பேக்’ அல்லது ‘செடான்’ போதும். அதற்கும் மேல் என்றால் ‘எஸ்.யூ.வி’ அல்லது ‘எம்.பி.வி’ மாடல்கள் பொருத்தம்.

    * விலை பற்றியும் சேவை பற்றியும் டீலர்களிடம் முன்னதாகவே கேட்டுக்கொள்ள வேண்டும்.

    * எதிர்பார்க்கும் வசதிகள், பட்ஜெட் உள்ளிட்ட விபரங்களை ‘ஷோ-ரூம்’ பிரதிநிதியிடம் தெளிவாக சொல்ல வேண்டும். கார் மாடல், கார் கடன் ஆகிய முதற்கட்ட நடவடிக்கைகள் முடிந்த பிறகு, காருக்கான சலுகைகள் மற்றும் இதர ‘வாரண்டி’ விபரங்களை தெரிந்து கொண்டு, முன்பதிவு செய்யலாம்.

    * வாங்கும் கார் மற்றும் மாடல் பற்றி முடிவு செய்த பின்னர் கார்கள் பற்றிய அனுபவமுள்ள நண்பருடன் ஷோ-ரூமுக்கு சென்று ‘டெஸ்ட் டிரைவ்’ செய்து பார்க்கலாம். அதன் மூலம் இன்னும் தெளிவு கிடைக்கும். முடிந்தால் குடும்ப உறுப்பினர்கள் ஓரிருவர் இருப்பதும் நல்லது.

    * தவணை முறையில் வாங்குவதென்றால் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் வட்டி விகிதம், ‘டாக்குமெண்ட்’ கட்டணம் மற்றும் செலுத்த வேண்டிய முன்பணம் ஆகிய விபரங்களை முன்பே அறிந்து கொள்வது முக்கியம்.



    வெயில் காலத்தில், நிற்கும் காரில் ஏ.சி உபயோகிப்பதில் எச்சரிக்கை தேவை...

    சுட்டெரிக்கும் வெயில் காரணமாக கார்களில் ஏ.சி உபயோகம் தவிர்க்க இயலாததாக இருக்கும். பொதுவாக, கார் ஓட்டும் போது ஏ.சி போடுவதுதான் வழக்கம். ஆனால், பலரும் நிறுத்தப்பட்டுள்ள காரில் ஏ.சி போட்டுக்கொண்டு உறங்குவது அல்லது ஓய்வெடுப்பது வழக்கம்.

    அத்தகைய சூழலில் கார் என்ஜின் இயங்கும்போது வெளிவரும் புகையில் ‘கார்பன் மோனாக்ஸைடு’ என்ற நச்சுத்தன்மை கொண்ட வாயு இருக்கும். அவ்வாறு வெளியேறும் வாயுவானது காரின் அடிப்பகுதி வழியாக காருக்குள் பரவும் வாய்ப்பு உள்ளது.

    அந்த நச்சு வாயுவை சுவாசிக்கும்போது மூச்சு திணறல் ஏற்பட்டு, உடலுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. வேறு வழி இல்லை என்ற சூழலில் காரின் கண்ணாடியை சற்று கீழே இறக்கிய நிலையில் வைத்துக்கொள்வது பாதுகாப்பானது.

    அதாவது, வெளிக்காற்று காருக்குள் வந்து செல்லும் நிலையில் இருந்தால் நச்சு வாயுவின் தாக்கம் குறையும். மேலும், கார் நிறுத்தப்பட்ட நிலையில் காரின் ஏ.சி-யை ‘ரீ-சர்குலேஷன் மோடில்’ வைப்பதும் கூடாது. குறிப்பாக, இரவு நேரங்களில் காரின் ஏ.சியை ‘ஆன்’ செய்து வைத்துக்கொண்டு உள்ளே உறங்குவதும், தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
    Next Story
    ×