search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியவை
    X

    பெண் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியவை

    பெற்றோர் பெண் குழந்தைகளுக்கு சில விஷயங்களை கண்டிப்பாக சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்னவென்று விரிவாக கீழே பார்க்கலாம்.
    * நல்ல தொடுதலுக்கும், கெட்ட தொடுதலுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லித் தர வேண்டும். பள்ளியிலோ அல்லது மற்ற வெளியிடங்களிலோ யாரும் அவர்களை தொட வேண்டிய அவசியமில்லை என்பதை உணர்த்த வேண்டும்.

    * சிறுமிகளை மற்ற ஆண்கள் மடியில் அமர அனுமதிக்கக்கூடாது.

    * சிறுவர், சிறுமியர்கள் விளையாடப் போகும்போது அவர்கள் மீது ஒரு கண் இருக்கட்டும். அவர்கள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

    * எதிர்பாலின கவர்ச்சி மற்றும் பிறப்பு உறுப்பு பற்றிய கேள்விகளுக்கு நேர்மறையான, எளிமையான பதில்களைச் சொல்லி பழக்க வேண்டும். கண்டிப்புகளை காட்டி அவர்களை திசைதிருப்பிவிட்டுவிடாதீர்கள்.

    * குழந்தைகளுக்கு பிடிக்காத உறவினர்/நபர்களுடன் சேர்ந்திருக்கச் சொல்லி வற்புறுத்தவோ, அவர்களுடன் செல்லவோ அனுமதிக்க வேண்டாம்.

    * சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய குழந்தை திடீரென்று அமைதியாகிவிட்டால், பொறுமையாக அதனிடம் பேசி காரணத்தை அறியுங்கள்.

    பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டியவை:

    * நிர்பயா மற்றும் சுவாதி துயரச் சம்பவங்கள் நேராமல் இருக்க சிறுவயது முதலே பெண்களுக்கு பாலின வேறுபாடு மற்றும் பாலியல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை முறைகளை சொல்லிக் கொடுப்பது அவசியமாகும்.

    * அவசர காலங்களில் குழந்தைகள் தொடர்பான உதவி எண் 1098, பெண்களின் பாதுகாப்பு அழைப்புக்கான இலவச அழைப்பு எண் 1091 மற்றும் காவல் உதவி எண் 100 ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

    * இரண்டு அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் நாம் உடை மாற்றக்கூடாது. குறிப்பாக எதிர்பாலினத்தவர்களான தந்தையும், சகோதரர்களும் அரைகுறை ஆடையுடன் நிற்கக்கூடாது.

    * மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்ய கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர் சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

    * தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்றவைகளை தடை செய்துவிட வேண்டும்.

    * உங்கள் குழந்தை, இன்னொருவரை பற்றி ஒருமுறை குற்றச்சாட்டு கூறினாலே, அதற்கு முக்கியத்துவம் கொடுத்து கவனியுங்கள்.

    * மற்ற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்வதை தவிர்க்கவும். மற்றவர்கள் ஒப்பிட்டு குறைசொன்னாலும், உங்கள் குழந்தையின் தனித்துவத்தை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

    * அரசாங்கம் பெண் குழந்தைகள் பிறந்தால் நிதி உதவி, கல்வி நிதி உதவி, திருமண நிதி உதவி, சேமிப்பு சலுகைகள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரு கிறது. பெற்றோர் அதை சிறப்புற பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    Next Story
    ×