search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    புத்தாண்டு உறுதிமொழியின் சிறப்புகள்
    X

    புத்தாண்டு உறுதிமொழியின் சிறப்புகள்

    இன்று உலகெங்கும் பல தரப்பட்ட மக்களும் புத்தாண்டு வரவேற்கும் அதே நாளில் தங்களுக்கு விருப்பமான, நடைமுறைப்படுத்தக்கூடிய உறுதிமொழிகளை ஏற்கின்றனர்.
    புத்தாண்டு உறுதிமொழிகள் இன்றளவும் அதிக மக்களால் நடைமுறைப்படுத்தப்படும் ஓர் வழக்கமாக உள்ளது. மேற்கத்திய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட இப்பழக்கம் நாளடைவில் கிழக்கத்திய நாடுகளுக்கு பரவி இன்று உலகெங்கும் பல தரப்பட்ட மக்களும் புத்தாண்டு வரவேற்கும் அதே நாளில் தங்களுக்கு விருப்பமான, நடைமுறைப்படுத்தக்கூடிய உறுதிமொழிகளை ஏற்கின்றனர்.

    பல மத பிரிவுகளிலும் ஒவ்வொரு விதமான உறுதி மொழி ஏற்பு நடைமுறையில் பன்னெருங்காலமாக இருந்து வந்துள்ளது. அவை அனைத்தும் புதிய வடிவில் புத்தாண்டு உறுதிமொழிகளாக உலகெங்கும் புதிய ஆண்டு பிறப்பின் முதல் நாள் முதல் அரங்கேற்றப்படுகின்றன.

    புத்தாண்டு உறுதிமொழிகள் பெரும்பாலும் கிறிஸ்துவர்கள் நியூ இயர் ஈப் அன்று நடைபெறும் பிரார்த்தனை கூட்டத்தில் எடுத்து கொள்வர். இதற்கென அவரவர் அவரது இலக்குக்கான ஓர் உறுதிமொழியை தயார் செய்து பகிரங்கமாகவோ, அல்லது தனக்குள்ளேவோ உறுதிமொழயை ஏற்று கொள்வர். அதுபோல் அமெரிக்க நாடுகள் பலவற்றிலும் அதிக அளவு மக்கள் புத்தாண்டு உறுதிமொழி ஏற்பதை ஆர்வமுடன் மேற்கொள்கின்றனர்.

    உத்வேகத்தை தரும் புத்தாண்டு உறுதிமொழிகள்:

    புத்தாண்டு உறுதி மொழிகள் பலவாறு இருந்தாலும் அவை அனைத்தும் புதிய ஆண்டை வரவேற்கும் விதமாகவும், அவ்வாண்டு முழுவதும் புதிய உத்வேகத்துடன் செயல்பட வைக்கும் ஓர் தூண்டுகோளாகவும் செயல்படுகிறது. உலகெங்கும் வாழும் பலதரப்பட்ட மொழி, இனம், மத மக்கள் அனைவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ற உறுதிமொழிகள் ஏற்கின்றன. சில உறுதிமொழிகள் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கும். சில உறுதி மொழிகள் சிரிப்பை உண்டாக்கும். எதுவாயினும் உறுதி மொழிகள் என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தை சார்ந்ததே.

    ஆரோக்கியம் சார்ந்த உறுதிமொழிகள்:

    தன் உடல் நலன் பேண வழிவகை செய்யும் நடைமுறைகளை நடைமுறைபடுத்த மேற்கொள்ளும் முயற்சிகளை தொடங்கும் உறுதிமொழிகள்தான் அதிகபடியாய் உள்ளது. ஏனெனில் உடல்நலன் பேணும் புதிய நடைமுறையை அனைவரும் விரும்புவர். அதற்கேற்ப பல பகீரத முயற்சிகளை மேற்கொண்டு ஒரு சிலர் வெற்றி அடைவர். ஒரு சிலர் தொடர்ந்து கடை பிடிக்க முடியாமல் பாதியிலேயே விட்டுவிடுவர்.

    புத்தாண்டு முதல் மது அருந்தமாட்டேன், புகைபிடிக்க மாட்டேன், அசைவம் சாப்பிடமாட்டேன், தினசரி காலை ஜாக்கிங் செல்வேன். ஜிம்மிற்கு செல்வேன். எண்ணெய் பலகாரங்கள் அடிக்கடி உண்பதை குறைப்பேன். அதிகமாக டீ சாப்பிடுவதை நிறுத்துவேன். உடல் எடையை குறைப்பேன். என தன் உடல் நலன் பேணும் முயற்சிக்கான உறுதிமொழிகள் அதிகம் ஏற்கப்படுகின்றன. இதில் எந்த அளவிற்கு வெற்றி என அவருக்கு மட்டுமே தெரியும்.

    பணி சார்ந்த உறுதிமொழிகள்:

    தினசரி தன் பணிகளை அன்றைய தினமே முடிப்பேன், அதிக நாட்கள் விடுமுறை எடுக்கமாட்டேன், அயர்னிங் செய்த ஆடையை மட்டுமே அணிவேன். குழந்தைகளை கவனிக்க சில மணிநேரம் ஒதுக்குவேன். பணி சார்ந்த தவறுகளை செய்யாமல் இருப்பேன் என புதிய பாணியில் பணியில் உள்ளேன் தங்கள் உறுதிமொழியை அலுவலக மேஜையில் நினைவூட்டும் வாசகங்களுடன் மேற்கொள்வர்.

    புத்தாண்டு உறுதிமொழிகள் என்பதில் சில அன்றாட நடைமுறைகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் கூட நடைமுறைப்படுத்தப்படும். அந்த உறுதிமொழிகள் பார்க்க சாதாரணமாய் இருந்தாலும் அது அந்த நபரின் முன்னேற்றத்திற்கு உதவும் எனும்போது சிறந்த உறுதிமொழியாகவே விளங்கும்.
    Next Story
    ×