search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அதிகரிக்கும் தனிப்படுக்கை தம்பதிகள்
    X

    அதிகரிக்கும் தனிப்படுக்கை தம்பதிகள்

    தற்போதுள்ள சூழ்நிலையில் பல தம்பதிகள் தனித்தனி படுக்கையறையில் தூங்கும் வழக்கத்தை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
    ‘கணவரும்- மனைவியும் ஒரே படுக்கைஅறையில் தூங்கினால் பாசம் பெருகும்’ என்று சொல்லப்பட்டு வந்த நிலை மாறி, ‘தினமும் தனித்தனி படுக்கைஅறைகளில் தூங்குங்கள். தேவைப்படும் நேரத்தில் மட்டும் இணைந்துகொள்ளுங்கள். அதுவே தாம்பத்யத்திற்கு ஏற்றது’ என்று சொல்லப்படும் நிலை உருவாகியிருக்கிறது.

    ‘ஆமாம்.. அது சரிதான்..!’ என்று சந்தோஷமாக தலையாட்டுகிறார்கள், தனிப்படுக்கை தம்பதிகள். அதனால் பல தம்பதிகள் தனித்தனி படுக்கையறையில் தூங்கும் வழக்கத்தை விரும்பி ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். பிரபலங்களும் அதை ஆதரிக்கிறார்கள்.

    வரலாற்று ரீதியாகவும் இதற்கு உதாரணங்கள் இருக்கின்றன. விக்டோரியா மகாராணி காலத்தில் கணவனும் - மனைவியும் தனித்தனி படுக்கையறையில் துயில்கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்திருக்கிறது. ராணிகூட தனியறையில் துயில்கொள்ளும் பழக்கம் கொண்டிருந்திருக்கிறார். முகலாயர் காலத்திலும் படுக்கைஅறையை பிரிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. அக்பர், பதேபூர் சிக்ரியில் அரண்மனை கட்டியபோது, பெண்களுக்கான பகுதியை கட்டுமானம் செய்யும் பொறுப்பை நிர்வகிக்க ஷெனானா என்ற பெண்ணையே நியமித்திருந்தார். அக்பர் துணைவியரின் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்தார் என்றாலும், தனி படுக்கையறை வழக்கத்தையே கையாண்டிருக்கிறார்.

    இப்போதும் நிறைய பேர் இந்த வழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள். இதற்கு அவர்கள் கூறும் காரணம் ஏதோ மனக்கசப்பிலோ, கட்டுப்பாடு விதித்துக் கொண்டோ இப்படி தனியறையில் நாங்கள் படுக்கவில்லை. சுமுகமாகவே வாழ்கிறோம். தேவையான இடைவெளிவிட்டு சீராக செல்கிறோம்” என்கிறார்கள்.

    சராசரியாக 40 வயதைத் தொடும் தம்பதிகள் பெரும்பாலும் தனியறை தூக்கத்தையே விரும்புகிறார்களாம். ஒருவித புரிதலுடன் இதை ஏற்றுக்கொண்டு வாழ்கிறார்களாம். குறிப்பாக பெண்கள் குழந்தைகளின் நலன்கருதியும், ஆண்கள் தங்கள் பணி நிமித்தமாகவும் இதற்கு சம்மதம் தெரிவிக்கிறார்கள்.

    இத்தகைய பழக்கம் மனோரீதியாகவும் சில நல்ல பலன்களைத் தரும் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். கூடவே “இத்தகைய முடிவு தம்பதிகளுக்கு இடையே இணக்கத்தையும், உற்சாகத்தையும் தரக் கூடியதாக இருக்க வேண்டும். மூன்றாம் நபர் வாழ்க்கையில் நுழையும் வகையான மாற்றத்தை இது ஏற்படுத்திவிடக்கூடாது” என்று எச்சரிக்கைமணியும் அடிக்கிறார்கள்.

    தனித்தனி அறையில் கணவன்-மனைவி துயில்கொள்வது, சந்தேகத்தையும், தவறான தொடர்பையும், பிரிவினைகளையும் வளர்க்குமோ என்ற சந்தேகம் பலருக்கு எழும்.  “நாம் தூக்கத்தின் இடையே எழுந்து எதையும் பேசப்போவதில்லை. நல்ல நண்பர்கள், உறவுகளைக்கூட அடிக்கடி சந்திப்பதில்லை. ஆனால் அவர்களை பார்க்கும்போது மகிழ்ச்சியும், அன்பும் பெருக்கெடுப்பதில்லையா? அது போன்றதுதான் கணவனும், மனைவியும் தனித்தனி அறைகளில் தூங்குவதும்”.

    படுக்கையறையில் மட்டுமல்ல குளியல் அறை மற்றும் இதர இடங்களிலும் தங்களுக்கான தனிப்பகுதியை விரும்பும் தம்பதிகளும் இருக்கிறார்கள்.
    Next Story
    ×