search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பண்டிகை காலத்தில் ஷாப்பிங் செல்லும் போது கவனிக்க வேண்டிவை
    X

    பண்டிகை காலத்தில் ஷாப்பிங் செல்லும் போது கவனிக்க வேண்டிவை

    பண்டிகை காலத்தில் பர்சேஸ் செய்யும் போது மகிழ்ச்சியுடன் பொருட்களை வாங்கி வாங்கவும் வேண்டும் கவனத்துடனும், பாதுகாப்புடனும் செல்ல வேண்டும்.
    பண்டிகை காலங்களில் அனைத்து வியாபார ஸ்தலங்களிலும் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதும். பேருந்து, ரெயில் என அனைத்திலும் வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் கூட்டம் வழியும். பண்டிகை கால பர்சேஸ் என்றதும் மக்களின் ஆர்வம் அதிகரிப்பது போல் திருடர்களுக்கும் ஆர்வம் அதிகரிக்கும், வியாபார ஸ்தலங்களில் மக்கள் அதிக அளவு பொருட்களை வாங்குவதால் வியாபாரிகள் அதிக லாபம் பெருவது போல், நம்மோடு ஒட்டி உறவாடி இடித்து வரும் ஜேப்படி திருடர்கள் பணம் மற்றும் பொருட்களை திருடி லாபம் சம்பாதிக்கின்றனர்.

    திருடர்கள் ஜாக்கிரதை, இவர்கள் தான் திருடர்கள் என புகைப்பட கண்காட்சி பலகைகள் பல வைத்திருந்த போதிலும் நாம் அதனை பற்றி எல்லாம் கவலை பட போவதில்லை.

    திருடு போன பிறகு நாம் கவலை கொண்டு அழுது ஆர்ப்பரிக்கும் முன் கூட்டம் நிறைந்த பகுதிகளில் செல்லும் போது விழிப்புணர்வுடன் செல்வதும் அவசியம். இல்லையெனில் குழந்தைகளும் வழித் தவறி விடும். சில சமயம் குழந்தை கடத்தும் கும்பல் குழந்தைகளை லாவகமாக பேசி அழைத்துச் சென்றுவிடும், கூட்ட நெரிசல் என்றாலே திருடர்களுக்கு கொண்டாட்டம், கவனம் நிச்சயம்.

    இன்றைய நாளில் பொருட்கள் வாங்கும் திறன் மக்களிடம் அதிகரித்து உள்ளது என்பதுடன் நிறைய புதிய புதிய கடைகள் வந்துள்ளதால் அதிகமாக அலசி ஆராய்ந்தும் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இதன் காரணமாய் ஒரே வியாபார பகுதியில் அதிகளவு மக்கள் ஒன்று சேர்கின்றனர். அதாவது 20 அடி அகல சாலையிலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுகிறார்கள் என்றால் எவ்வளவு கூட்ட நெரிசல் என அறிய கூடும்.

    நாம் கூட்டத்தில் நகர்ந்து செல்லும் போது நம்மோடு வரும் சக மனிதர்களில் சிலர் திருடர்களாக இருப்பர், அவர் நாம் நகரும் போதே நம்மிடம் இருந்து விலையுயர்ந்த ஆபரணம், பர்ஸ், வாட்ச், செல்போன் போன்றவற்றினை திருடி செல்வர்.

    எனவே கடைக்கு செல்லும் முன் விலையுயர்ந்த ஆபரணங்கள் அதிகமாக அணிந்து செல்வதை தவிர்க்கவும், பெண்கள் கழுத்தில் தாலி கொடி போன்றவற்றை புடவை முந்தானை கொண்டு மூடி செல்ல வேண்டும், முடிந்த அளவு கையில் நிறைய பணம் எடுத்து செல்வதை தவிர்க்கவும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பொருட்களை வாங்கலாம்.

    அவ்வாறு இல்லையெனில் அந்தந்த வணிக வளாகங்களிலேயே ஏ.டி.எம் மையத்தில் தேவையான பணத்தை எடுத்து பொருள் வாங்கலாம். மேலும் திருட நினைப்பவர் நம்மை திசை திருப்பி விட்டு தான் திருடுவார்கள், அருவருப்பான திரவம் மற்றும் பசையை ஆடையில் தடவி விட்டு நாம் அதனை துடைக்கும் சமயத்தில் திருடிச் சென்றுவிடுவர்.

    அதுபோல் கீழே ஏதும் பணத்தை போட்டு விட்டு அதனை எடுக்க செய்வது போல் பர்ஸ்-யை, பணப்பையை களவாடி விடுவர் கூட்டம் நெரிசலாக உள்ள போது இந்த இந்த டெக்னிக்கல் ஏதும் பயன்படுத்த தேவையில்லை, இடி மின்னல்கள் இடிக்கும் போதே பொருட்களை திருடி செல்வர், அதுபோல் நாம் வாங்கும் புதிய பொருட்கள், செல்போன் என எது கிடைத்தாலும் அவருக்கு லாபமே.

    எனவே கூட்டம் நிறைந்த பகுதிக்கு செல்லும் முன் அதிகப்படியான பைகளை கொண்டு செல்ல வேண்டாம் மேல்சட்டை பாக்கெட்டில் ஏதும் பணம் மற்றும் செல்போன்களை வைத்து செல்ல வேண்டாம். நகைகளை அதிகமாக அணிந்து செல்லவும் வேண்டாம் வாகனங்களுக்குள் பொருட்களை வைத்து கதவுகளை நன்றாக பூட்டி விடவும் அறியாத நபர்கள் அதிகமாக உரசி கொண்டு வந்தால் விழிப்புடன் இருக்கவும்.

    பண்டிகை காலத்தில் பர்சேஸ் செய்யும் போது மகிழ்ச்சியுடன் பொருட்களை வாங்கி வரவே எண்ண வேண்டும். எனவே கவனத்துடன் செல்வோம்.
    Next Story
    ×