search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களே தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே
    X

    பெண்களே தாலி கட்டும் முன் நெருக்கம் வேண்டாமே

    திருமணத்திற்கு முன் ஆண்கள் வரம்புமீறினாலும், பெண்கள் தான் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்.
    அன்றைய காலத்தில் உற்றார் உறவினர்கள் ஒன்று சேர்ந்து திருமண உறவில் இணையவிருக்கும் மணமக்களுக்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைப்பார்கள்.

    "நிச்சயதார்த்தம் டூ திருமணம்" இந்த இடைப்பட்ட காலம் நிச்சயிக்கப்பட்ட இருவரும், ஒருவரையொருவர் புரிந்துகொண்டு வெற்றிகரமாக திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க அச்சாரமிடுகிறது.

    ஆனால், இந்த நேரத்தில் வரம்புமீறும் பட்சத்தில் உறவுகள் சீர்குலையவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு அளவுக்கதிமாக மொபைல்களில் உரையாடுவது, டேட்டிங் செல்வது, அளவுக்கதிமான அன்பளிப்புகளை பரிமாறிக்கொள்வது. அளவுக்கதிகமாக மொபைல்களில் உரையாடுவதன் மூலம், இக்காலத்து பெண்கள் மற்றும் ஆண்களின் மனது உடலுறவில் ஈடுபடுவதற்கு துடிக்கிறது.

    திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சனைகளை ஏற்படுத்திவிடக்கூடும், இதில் ஆண்கள் வரம்புமீறினாலும், பெண்கள் தான் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும். ஏனெனில் இருபாலரும் தவறு செய்யும் பட்சத்தில், இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

    நிச்சயதார்த்தத்துக்குப் பின், திருமணத்துக்கு முன் என்ற இடைவெளியில் அதிகம் நெருக்கமும் தவிர்க்கப்பட வேண்டியது. பேசுவது, சந்திப்பது என்றபோதிலும், அதை ஆவணமாக மாற்றும் சாத்தியங்களை தவிர்ப்பதும் புத்திசாலி பெண்ணுக்கு அழகு.

    குறிப்பாக, சேர்ந்த மாதிரி புகைப்படங்கள் எடுத்துக்கொள்வதை தவிர்க்கலாம். தனித்த படங்களை பகிர்ந்து கொள்வதிலும்கூட ஆபத்து இருக்கிறது.

    Next Story
    ×