search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வீட்டு கடன் பெற கிரெடிட் ஸ்கோர் அவசியம்
    X

    வீட்டு கடன் பெற கிரெடிட் ஸ்கோர் அவசியம்

    வங்கியில் பெறப்படும் வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன் எதுவாக இருந்தாலும் அவை பற்றிய தகவல்களை வங்கிகள், ‘சிபில்’ எனப்படும் ‘கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட்’ என்ற கடன் அறிக்கையை தாக்கல் செய்யும் நிறுவனத்துக்கு தருகின்றன.
    வங்கியில் பெறப்படும் வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன் எதுவாக இருந்தாலும் அவை பற்றிய தகவல்களை வங்கிகள், ‘சிபில்’ எனப்படும் ‘கிரெடிட் இன்பர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட்’ என்ற கடன் அறிக்கையை தாக்கல் செய்யும் நிறுவனத்துக்கு தருகின்றன.

    வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்குபவர்கள் குறித்த தகவல்களை மாதந்தோறும் இந்த நிறுவனத்துக்குத் தெரிவிக்கவேண்டும். அவற்றின் மூலம் அதிகபட்ச அளவில் திருப்பி செலுத்தப்படும் கடன்களை, சரியான நபர்களுக்கு வழங்க முடியும் என்று வங்கிகள் கருதுகின்றன.

    ‘சிபில் ஸ்கோர்’ முக்கியம் :


    ‘சிபில்’ நிறுவனத்தின் முக்கிய பணி கடன் பெறுபவர்கள், கடன் அட்டை பயன்படுத்துபவர்கள் ஆகியோர் குறித்த தகவல்களை சேகரித்து அவர்கள் கடனை திருப்பி செலுத்தும் முறையை அளவிட்டு அதை ‘கிரெடிட் ஸ்கோர்’ எனப்படும் புள்ளிகளாக வழங்குவதாகும். கடன் தொகையில் நிலுவை எதுவும் வைக்காமல் சரியான காலகட்டங்களில் கட்டி முடிக்கப்படும்போது ‘கிரெடிட் ஸ்கோர்’ எனப்படும் கடன் பெறுவதற்கான தகுதி நிலை நல்ல விதமாக இருக்கும். வீட்டுக்கடன் பெறுவதற்கான தகுதியை பெறுவதற்கு நல்ல ‘சிபில் ஸ்கோர்’ முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. அது குறைவாக இருந்தால் வீட்டுக்கடன் பெறுவது சிரமமாக இருக்கும்.

    தகவல்கள் பதிவு :

    அனைத்து வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்த தேதி, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு, பான்கார்டு ஆகியவற்றின் எண்கள் ‘சிபில்’ அமைப்பின் தகவல் சேமிப்புகளாக இருக்கும். கடனை உரிய காலங்களில் திருப்பி செலுத்தாத வாடிக்கையாளர்கள் பற்றிய அந்த தகவல்கள், வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்ற நிலையில் கடன் பெறுவது சாத்தியமானதாக இருக்காது.

    ‘கிரெடிட் ஸ்கோரை’ அதிகரிக்க சில ‘டிப்ஸ்கள்’ :

    1) கடனை நிலுவையில் வைப்பதையும் தாமதமாக செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும். தவணை செலுத்துவதில் சரியாக இருப்பது முக்கியம். காரணம், தவணை செலுத்தப்படும் விதங்களின் தாக்கம் ‘சிபில் ஸ்கோரில்’ பிரதிபலிக்கும்.

    2) ‘கிரெடிட் கார்டு’ வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் உச்ச வரம்பை எட்டுவதை தவிர்க்க வேண்டும். அதுபோன்ற சமயங்களில் ‘கிரெடிட் கார்டு’ உபயோகிக்க வேண்டாம். அதிகபட்ச வரம்பு வரை உபயோகிப்பது என்பது கடனை திருப்பி செலுத்த அவற்றை மட்டுமே நீங்கள் சார்ந்து இருப்பதாக எடுத்துக்கொள்ளப்படும். அது ‘சிபில் ஸ்கோரை’ பாதிக்கும் அம்சமாகும்.

    3) பிணை இல்லா கடன் மற்றும் ‘கிரெடிட் கார்டுகளை’ அதிகம் பயன்படுத்துவதும் ‘ஸ்கோரை’ குறைக்கக்கூடியதாகும். பிணைகள் இல்லாமல் கிடைக்கும் கடன் வகைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

    4) வீட்டுக்கடன், வாகனக்கடன் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றை ஒரே சமயத்தில் பெறுவதை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். கடனை சார்ந்துதான் நமது பொருளாதார நிலை இருக்கிறது என்ற தோற்றத்தை அது எடுத்துக்காட்டுவதாக இருக்கும்.

    வீட்டுக்கடன் போன்ற நீண்ட கால கடன் பெறும் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமானால் ‘கிரெடிட் ஸ்கோரை’ மேற்கண்ட விஷயங்களை தவிர்ப்பதன் வாயிலாக அதிகரித்து கொள்ளலாம். 5) 300 முதல் 900 புள்ளிகள் வரை ‘கிரெடிட் ஸ்கோர்’ கணக்கிடப்படுகிறது. அதில் 700 புள்ளிகளுக்கு மேலாக பெற்றிருப்பது கடன் பெறுவதற்கு உகந்த அளவாக உள்ளது.
    Next Story
    ×