search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தேர்வில் தோல்வி என்பது வீழ்ச்சியல்ல
    X

    தேர்வில் தோல்வி என்பது வீழ்ச்சியல்ல

    தேர்வில் தோல்வி என்பது வாழ்க்கையின் முடிவு என்ற அர்த்தம் அல்ல.
    'அன்றாட வேலைகளை ஆசையோடு செய்; அதுதான் வெற்றியின் ஒருவரி ரகசியம்' என்ற வரியை நினைவுபடுத்துங்கள். 'தோல்வி என்பது விலகி நிற்கும் வெற்றி' என்பதை பிள்ளைகளுக்கு, புரிய வைக்க வேண்டும். தேர்வில் தோற்றால் வாழ்வே முடிந்து விடாது.

    படிப்பதற்கு வாய்ப்பும், வசதியும் இருக்கும் போது, மனம் தளர்ந்து விடலாமா? அதைவிட சிறந்து காட்ட வேண்டாமா? ஒரு கனம் சிந்தித்து பாருங்கள்... தற்கொலை என்பது நொடியில் எடுக்கும் முடிவு தான். மனித வாழ்வு என்பது, கிடைத்ததற்கரிய பெரும் பாக்கியம். சவால்களை சமாளிக்காது, வெற்றிப் பாதையிலிருந்து விலகி கோழைகளாய் சாவதை, எந்த வகையில் எடுத்துக் கொள்வது? வாழ்வதோ ஒரு முறை, அதில் வாழ்ந்து, சிறந்து காட்ட வேண்டும். வாழ்வில் வெற்றியை ஏற்றுக் கொள்வது போன்று, ஏற்படுகிற சிறு சறுக்கலையும் சிறு சிறு தோல்விகளையும், ஏற்று கொள்கிற மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    'திறமையற்றவர்கள் என்று யாரும் இல்லை. என்றாலும், சிலர் தோல்வி அடைவதின் காரணம் அத்திறமையை பயன்படுத்தாததே'. பிளஸ் 2 தேர்விலோ அல்லது 10ம் வகுப்பு தேர்விலோ வெற்றி பெறவில்லை என்றால், வாழ்வு முடிந்து விட்டதாய் பொருள் அல்ல. ஒவ்வொரு மாணவனுக்கும், பிளஸ் 2 என்பது வாழ்வில் அடித்தளம் தான். அந்த அடித்தளத்தில் ஆரம்ப வாழ்க்கை ஓரளவு நிர்ணயிக்கப்படுவது உண்மை தான். அதற்காக அடித்தளத்தில் கொடுக்கிற நெருக்கம், அடித்தளமே ஆட்டம் கண்டு விடக்கூடாது. முதலுக்கே மோசம் வந்து விடக்கூடாது.

    தோல்வி, வாழ்க்கையின் இயல்பு என்பதை உணருங்கள். 'எனது நேற்றைய சந்தோஷம் நாளைக்கு தீர்ந்துவிடும். போன வாரத்து துக்கம் இந்த வாரம் சாதாரணமாய்த் தெரியும். திங்கட்கிழமை இருந்த பயமும், வேதனையும், புதன் கிழமை வரை கூட இருப்பதில்லை. இந்த புரிதல் மனிதனுக்கு வந்துவிட்டால், சோர்ந்து போகாமல் தன் கடமையை தொடர்ந்து கொண்டிருப்பான்'. எனவே, இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிள்ளைகளுக்கு, ஆசிரியர்களும், பெற்றோரும் ஆதரவாக இருந்து, அவசரப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாமல், நீங்களே அவர்களின் அவசரத்திற்கு, ஆதாரமாகி விடக் கூடாது.

    'தடைகள், சறுக்கல்கள் மற்றும் தோல்விகளை ஒழிக்கும் மருந்து, இரண்டு ரசாயன கலவையால் ஆனது. அவை, 'பயிற்சி, முயற்சி' என்பவை. தோல்வியை கண்டு துவண்டு விட வேண்டாம். 'கடின உழைப்பு உன் கைவசமானால், பின், கவலைப்பட அவகாசம் ஏது?' முயற்சி செய்யுங்கள்; வெற்றி பெறுங்கள்.

    Next Story
    ×