search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து மாத்திரைகள் அவசியமா?
    X

    வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து மாத்திரைகள் அவசியமா?

    வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்து மாத்திரைகள், ஹெல்த் ட்ரிங்க்ஸ் சாப்பிட வேண்டியதும் அவசியமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
    அன்னையின் உடலில் சேரும் ஆரோக்கியமான உணவுகள்தான் குழந்தைக்கு ஊட்டச்சத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அளித்துக் காக்கின்றன. பொதுவாக, கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகள், ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். வயிற்றில் உள்ள கரு தங்கவும் அதன் தொடக்க நிலை வளர்ச்சி சீராக இருக்கவும் இந்த மாத்திரைகள் மிகவும் அவசியம்.

    ஆனால், வெறும் மருந்து, மாத்திரைகளால் மட்டுமே ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் தவறானது. அரிசி, கோதுமை, மீன், முட்டை, காய்கறிகள், கீரைகள், பழங்கள், தானியங்கள், நட்ஸ் என ஆரோக்கியமான உணவுகளைச் சமச்சீராக உண்டு வந்தாலே தாயும் சேயும் நலமாக இருப்பார்கள்.



    மருத்துவர் பரிந்துரைத்தால் அன்றியும் தேவை இல்லாத வைட்டமின் மாத்திரைகள், ஊட்டச்சத்து மாத்திரைகள் போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள். ஹெல்த் ட்ரிங்க்ஸ் என்ற பெயரில் தற்போது சந்தையில் கிடைக்கும் பெரும்பாலான உணவுப் பொருட்கள் செயற்கையான பொருட்கள் சேர்த்துத் தயாரிக்கப்பட்டவை. பேக்டு ஃப்ரூட் ஜூஸும் அப்படித்தான். இதற்கு பதிலாக பழங்களைச் சாப்பிடலாம். அதுதான் ஆரோக்கியம்.

    சில சமயங்களில் குழந்தையின் தொப்புள்கொடி சுற்றிக்கொள்வதுண்டுதான். அந்த மாதிரியான சமயங்களில் சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுப்பதற்கான வாய்ப்பு உள்ளது. பழைய பிரசவ முறைகளில் இப்படி மாலை சுற்றிப் பிறப்பது அன்னைக்கும் குழந்தைக்கும் ஆபத்தாக முடிந்திருக்கிறது. ஆனால், தற்போதைய நவீன மருத்துவமுறையில் சிசேரியன் மூலம் இந்தப் பிரச்சனையை எளிதாகக் கடக்கலாம். எனவே, இதற்காக அச்சப்படத் தேவையில்லை.
    Next Story
    ×