search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்ப்ப கால இரத்தசோகை குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
    X

    கர்ப்ப கால இரத்தசோகை குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

    பெண்கள் அதிகமாக இரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக சரியான அளவு இரத்தம் பெண்களின் உடலில் இருக்க வேண்டியது அவசியம்.
    பெண்கள் அதிகமாக இரத்தசோகையால் பாதிக்கப்படுகின்றனர். அதிகப்படியான பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் இரத்த பற்றாக்குறை இருக்கிறது. கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக சரியான அளவு இரத்தம் பெண்களின் உடலில் இருக்க வேண்டியது அவசியம்.

    உங்களுக்கு இரத்தசோகை உண்டாகுமா என்பதை இந்த சில அறிகுறிகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 1. முதல் பிரசவத்தில் அதிக இரத்த போக்கு 2. 20 வயதிற்கு முன்னர் தாயாவது 3. குறைவான உணவு சாப்பிடுவது 4. இரும்புச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடாமல் இருப்பது 5. மாதவிடாயின் போது அதிக இரத்தபோக்கு 6. மிகக்குறைந்த கால இடைவெளியில் இரண்டாவது குழந்தை 7.விட்டமின் சி உணவுகளை குறைவாக உண்பது..

    உங்களுக்கு இரத்தசோகை இருப்பதை இந்த சில அறிகுறிகள் வெளிப்படுத்திவிடும். 1. தலை சுற்றல் 2. தலைவலி 3. மூச்சு விடுவதில் சிரமம் 4. நெஞ்சு வலி 5. எரிச்சலடைவது மற்றும் கவனமின்மை 6. வெளிர் நிறம் கொண்ட கண்களின் அடிப்பகுதி, மேல் அன்னம் மற்றும் நகங்கள் 7. ஸ்பூன் வடிவில் நகங்கள் இருப்பது.

    நீங்கள் உங்களது கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ள முதல் மாதம் மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்லும் போதே அவர் உங்களது இரத்ததின் அளவை பரிசோதனை செய்துவிடுவார். நீங்கள் இரும்பு சத்து மற்றும் விட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்பதன் மூலம் இதனை நிவர்த்தி செய்யலாம்.

    சிறிதளவு இரத்த குறைபாடு இருந்தால் அதற்காக நீங்கள் அதிகம் பயப்பட தேவையில்லை. உரிய சிகிச்சைகளை எடுத்து கொண்டால் போதுமானது. ஆனால் இதனை கவனிக்காமல் நீண்ட நாட்கள் விட்டுவிடுவது ஆபத்தில் கொண்டு சேர்க்கும்.

    நீங்கள் இரத்தசோகையால் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றால் அது குழந்தையை எந்தவிதத்திலும் பாதிக்கப்போவதில்லை. நீங்கள் கர்ப்பத்தின் ஆறு மாதம் வரை இரத்த சோகையை சரி செய்யாமலேயே வைத்திருந்தால், அது குழந்தை குறைந்த உடல் எடையுடன் பிறக்க காரணமாகிவிடும்.

    மருத்துவரின் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்ளுங்கள். இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுங்கள். உணவுகளை தவிர்க்காமல் இருங்கள். மாதுளை, முட்டை, திராட்சை, மீன், ஸ்ட்ராபெர்ரி, ப்ரோகோலி, ஆரஞ்ச் ஜூஸ் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளுங்கள்.

    ஒரு சில உணவுகள் இரும்பு சத்தை உடல் உறிஞ்ச தடையாக இருக்கும். காபி, டீ, சோயா ஆகியவற்றை சாப்பிட வேண்டாம். அப்படி சாப்பிட்டு விட்டால் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு இரும்பு சத்து உணவுகளை சாப்பிடுங்கள்.

    Next Story
    ×