search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தமும்... அதனை தடுக்கும் வழிமுறைகளும்
    X

    பெண்களுக்கு ஏற்படும் மனஅழுத்தமும்... அதனை தடுக்கும் வழிமுறைகளும்

    அனைத்து பெண்களுக்கும் சுகாதார திறனை அடைவதற்கும் மற்றும் ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கு நம்பிக்கை தரும் வழிமுறைகளை பார்க்கலாம்.
     ஓவ்வொரு பெண்களுக்கும் அழுத்தத்தை பொறுத்துக் கொள்ளும் தன்மை வெவ்வேறு அளவில் உள்ளது. சிலருக்கு சிறு எரிச்சல் காரணமாக மன அழுத்தம் குறைவாகவும், சிலருக்கு பெரிய பிரச்சனைகள் காரணமாக அதிக மன அழுத்தமும், சிலர் மன அழுத்தத்தை உணராதவர்களாகவும் இருக்கிறார்கள்.

    உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், என்னென்ன பிரச்சனைகளுக்கு எவ்வாறு சகித்து கொண்டீர்கள், அந்த பிரச்சினைகளினால் உங்களுக்கு ஏற்பட்ட வருத்தம் எவ்வளவு கடினமான அனுபவங்கள், அதை எப்படி எதிர் கொண்டீர்கள்? இவை அனைத்தையும் ஒதுக்கித் தள்ளுங்கள். இவை அனைத்திற்கும் ஒரு தீர்வு உள்ளது. வாழ்வின் அனைத்து ஆதாரங்களையும் இயங்க வைக்க பெண்களால் முடியும்.

    முகத்தில் முடி, அடர்த்தி குறைவான முடி, ஒழுங்கற்ற மாதவிடாய், மாதவிடாய் தள்ளிப் போகுதல், வராமல் இருத்தல், உடல் வலி, எடை கூடுதல், தோல் வறண்டு காணப்படுதல் இவை போன்ற அறிகுறிகளுடன் ஒவ்வொரு நாளும் நிறைய பெண்களை சந்திக்க முடிகிறது. ஹார்மோன் பாதிப்பு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி,தூக்க கோளாறு, எடை அதிகமாவது. இவை அனைத்தும் முக்கிய பிரச்சனைகள் மன அழுத்தத்தை கொடுக்கிறது.

    உணர்வு நீக்கம் பெறுதல் உடற்பயிற்சி வகுப்பில் சேர்தல் (வாரத்திற்கு 5 மணி நேரம்)

    உடலில் சிறு பாதிப்பு என்றாலும் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். சிறிய பிரச்சனை தானே என்று அலட்சியம் காட்ட வேண்டாம்.

    தினமும் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில் கார்போஹைடிரேட் அளவைக் குறைக்க வேண்டும்.

    குறைந்தது 7-8 மணி நேரம் தூங்குதல். சமூக வலை தளங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்தல். இவை அனைத்து பெண்களுக்கும் சுகாதார திறனை அடைவதற்கும் மற்றும் ஒரு அமைதியான வாழ்க்கை வாழ்வதற்கும் ஒரு நம்பிக்கையைத் தரும். பெண்கள் அனைவரும் தங்கள் வாழ்வை மன அழுத்தத்திடம் விட்டுக் கொடுக்க வேண்டாம்.
    Next Story
    ×