search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற விரும்பும் பெண்கள்
    X

    சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற விரும்பும் பெண்கள்

    சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள இன்றைய பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்காக காரணத்தை கீழே விரிவாக பார்க்கலாம்.
    இயல்பாகப் பிறக்கும் குழந்தைகளில் ஐம்பதில் ஒன்று குறைபாடுகளுடன் பிறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வளவு எண்ணிக்கையான குறைபாடுகள் சோதனைக்குழாய் மூலம் கருத்தரிப்பு உண்டாகும்போது ஏற்படுவதில்லை என்பதை உறுதியாகக் கூறலாம்.

    சோதனைக்குழாய் முறையில் கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண்களுக்கு சில மருந்து மாத்திரைகள் சினைப்பைகளைத் தூண்டுவதற்காகத் தரப்படுகின்றன. இது தற்காலிகமாக சினைப்பையைத் தூண்டி நீர்க் கழலைகளை உண்டாக்குகிறது. இதை ஹைபர் ஸ்டிமுலேஷன் சிண்ட்ரோம் என்பார்கள்.
     
    லேப்ராஸ்கோப்பியை விட அல்ட்ராசோனிக் முறையில் கரு முட்டையை எடுக்கும்போது பிரச்சினைகள் அதிகம் வருவதில்லை.
     
    சோதனைக் குழாய் முறையில் குழந்தைப் பெற்றுக்கொள்வது என்பது மிகவும் எதிர்ப்பார்ப்பான ஒன்று. இம்முறையில் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட தூரத்திலிருந்து வருவதால் ஏற்படும் அலைச்சல், முட்டை எடுப்பதற்காகத் காத்திருத்தலால் வரும் சோர்வு ஆகியவற்றால் சோதனைக் குழாய்க் குழந்தை பெறும் சில பெண்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இவையெல்லாம் சாதாரணமான பிரச்சினைகள்தான்.
     
    ஆனால் இந்தக் பிரச்சைனைகள் எதுவும் ஆணுக்கு ஏற்படுவதில்லை. அவை விந்தளிப்பதோடு அவரது கடமை முடிந்துவிடும்.
     
    சிகிச்சைக்கு வரும்போதே, சோதனைக் குழாய்க் குழந்தைக்கு எப்படி தயாராக வேண்டும் என்ற விவரங்கள் சொல்லப்பட்டு விடுவதால் பெரும்பாலும் எந்தவிதமான பதற்றமும் தம்பதியருக்கு ஏற்படுவதில்லை. சொல்லப்போனால் இதுபோன்ற சூழலில்தான் அவர்களுக்குள் நெருக்கம் அதிகரிக்கிறது.
     
    பல கருவாக்க மையங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் கருவாக்கம் செய்கிறார்கள். சிறப்பான கருவாக்க மையங்களில் சோதனைக்குழாய் மூலம் கருத்தரிப்பதற்கான அனைத்து தகுதிகளையும் உண்டாக்கிய பின்னரே கருத்தரிக்கச் செய்வதால் ஒரே ஒரு முறையில் கருவாக்கம் செய்ய முடிகிறது.
    Next Story
    ×