search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மருத்துவர்கள் எப்போது சிசேரியன் செய்ய சொல்வார்கள்
    X

    மருத்துவர்கள் எப்போது சிசேரியன் செய்ய சொல்வார்கள்

    ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் வாழ்நாளில் மறக்க முடியாத தருணம் என்றால் பிரசவ காலம் தான். அக்காலத்தில் எல்லாம் அனைத்து பெண்களுக்கும் சுகப்பிரசவம் தான் நடந்தது. ஆனால் இன்றைய கால பெண்களுக்கு சிசேரியன் என்னும் அறுவை சிகிச்சையின் மூலம் தான் குழந்தைப் பிறக்கிறது.
    இக்கால பெண்கள் கர்ப்ப காலத்தில் நன்கு குனிர்ந்து நிமிர்ந்து வேலை செய்யாமல் இருப்பதோடு, நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உட்கொள்ளமல் இருப்பதும் காரணங்களாகும்.இன்னும் சில நேரங்களில் குழந்தை தவறான நிலையில் இருந்தாலோ அல்லது குழந்தை பிறக்கும் தினத்தை மருத்துவர்கள் கூறியும் இன்னும் பிரசவ வலி எடுக்காமல் இருந்தாலும் சிசேரியனைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

    இதுப்போன்று சிசேரியன் செய்வதற்கு இன்னும் ஏராளமான காரணங்கள் உள்ளன. சரி, இப்போது எத்தருணத்தில் எல்லாம் மருத்துவர்கள் சிசேரியன் செய்யுமாறு கூறுவார்கள் என்று பார்ப்போம்.

    முதல் பிரசவம் சிசேரியனாக இருந்தால், மருத்துவர்கள் இரண்டாவது பிரசவத்தையும் சிசேரியன் செய்து கொள்ளுமாறு அறிவுரை வழங்குவார்கள். இது மேலும் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும். குழந்தைப் பிறக்க வேண்டிய தேதியைத் தாண்டி, பிரசவ வலி ஏற்படாமல் இருந்தால், இந்த மாதிரியான நேரத்தில் சிசேரியன் செய்யுமாறு மருத்துவர்கள் அறிவுரை வழங்குவார்கள்.

    பிரசவ காலத்தில், பெண்கள் மிகவும் கடுமையான வலியை சந்திப்பார்கள். இந்நேரத்தில் தாய் மற்றும் வயிற்றில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பு சீராக இருக்க வேண்டும். ஒருவேளை தாய் வலியைத் தாங்க முடியாமல் மயக்கமடைந்தால், வயிற்றில் வளரும் சிசு வேதனைக்குள்ளாகும். இந்நேரத்தில் உடனடியாக சிசேரியன் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள்.

    சில நேரங்களில் பிறப்பு வழிப்பாதையில் குழந்தை நுழைவதற்குள் தொப்புள் கொடி நுழைந்து இறங்க ஆரம்பிக்கும். இப்படி ஏற்பட்டால், குழந்தைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காமல், குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். இந்த சூழ்நிலையில் சிசேரியன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறுவார்கள்.

    ஒருவேளை கர்ப்பிணிப் பெண் கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக உடல் உழைப்பில் ஈடுபட்டதால், கருப்பை பிளவு ஏற்பட்டிருந்தால், இந்நேரத்தில் சிசேரியன் மூலம் தான் குழந்தையைப் பெற்றெடுக்க முடியும்.

    பொதுவாக குழந்தை பிறக்கும் போது, பிறப்பு வழிப்பாதையை நோக்கி குழந்தையின் தலை தான் இருக்கும். ஆனால் அவ்வாறு இல்லாமல் குழந்தையின் கால் அல்லது பிட்டம் இருந்தால், இம்மாதிரியான தருணங்களில் சிசேரியன் செய்ய அறிவுறுத்துவார்கள்.

    சில தருணங்களில், தாயின் பிறப்புறுப்பு பகுதியில் ஹெர்பீஸ் நோய்த்தொற்றுக்கள் இருக்கலாம். இந்த தொற்று, குழந்தைக்கு ஏற்படாமலிருக்க சிசேரியன் செய்ய வேண்டுமென மருத்துவர்கள் கூறுவார்கள்.
    Next Story
    ×