search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் தேங்காய்ப்பால் பேஸ்பேக்
    X

    சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் தேங்காய்ப்பால் பேஸ்பேக்

    சருமத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் என்றும் இளமையாக வைத்திருக்க தேங்காய்ப்பாலை பயன்படுத்தி எப்படி பேஸ்பேக் தயாரிப்பது என்று பார்க்கலாம்.
    உங்கள் சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய் பாலை பயன்படுத்தலாம். தேங்காய்ப் பால் சாப்பிடுவது எப்படி மிகவும் நல்லதோ அதேபோல் அழகிற்கும் அசர வைக்க்கும் நன்மைகளை தருகிறது. தேங்காய் பால் சரும பொலிவிற்கு உதவுகிறது. கருமையை போக்குகிறது. நிறத்தை கூட்டுகிறது. சுருக்கத்தைப் போக்கும் மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் நன்மைகளை தருகிறது.

    தேங்காய் பாலை தினமும் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. வாரம் ஒருமுறை பயன்படுத்தினால் உங்கள் சருமத்தில் என்னென்ன மாற்றங்கள் கிடைக்கும் என பார்க்கலாம்.

    * கேரட் சாறு - 1 டீஸ்பூன், தேங்காய் பால் - 1 டீஸ்பூன் இநத் இரண்டையும் நன்றாக கலந்து முகத்திற்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் உங்கள் சரும நிறம் அதிகரிக்கும்.

    * முல்தானிமட்டி - 1 டீஸ்பூன், தேங்காய் பால் - 1 டீஸ்பூன் இந்த இரண்டையும் நன்றாக கலந்து முகத்துக்கு பேக் போல் போடுங்கள். வாரம் ஒரு முறை செய்ய வேண்டும். விரைவிலேயே அழகு பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும்.

    * உருளைக்கிழங்கு ஜூஸ் - 1 டீஸ்பூன், தேங்காய் பால் - 1 டீஸ்பூன், பச்சை பயிறு மாவு - 1 டீஸ்பூன் இந்த மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு “பேக்” போடுங்கள். காய்ந்ததும் கழுவி விடுங்கள். வாரம் இருமுறை இதைச் செய்தால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.
    Next Story
    ×