search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குளிர் காலத்தில் ‘லிப் - பாம்’ தேர்வில் கவனம் தேவை!
    X

    குளிர் காலத்தில் ‘லிப் - பாம்’ தேர்வில் கவனம் தேவை!

    குளிரை காலத்தில் பெண்கள் உதட்டை எப்படி இயற்கை முறையில் பராமரிப்பது என்பது குறித்து இன்று அறிந்து கொள்ளலாம்.
    குளிரை காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் மிக முக்கிய பிரச்சனை உதடுகள் வெளிறி, எரிச்சல், வெடிப்பு ஏற்பட்டு, வறண்டு விடுவது. முகத்திலேயே மிகவும் மென்மையான தோல், உதடுகளில் தான் உள்ளது. அதனால், எளிதில் வெடிப்பு, ரத்தம் வடிதல், சிவப்பு நிறமாதல் ஏற்படும். இன்று குளிர்காலத்தில் உதட்டை பராமரிப்பது எப்படி என்று பார்க்கலாம். 

    * உதடுகளில் நாம் பயன்படுத்தும், ‘லிப் – பாம், மாய்ஸ்சரைசர்’ போன்றவை, எண்ணெயை அடிப்படையாகக் கொண்டு அமைவது நல்லது. 

    * சரும வறட்சியால் தான், உதடுகள் வெடிக்கும். நிறைய நீர் அருந்துவது நல்லது. 

    * உதடுகளை சுற்றி வெடிப்பு ஏற்பட்டால், ‘வைட்டமின் – பி2’ குறைவு என, அர்த்தம். ‘பி2’ சத்துள்ள காய்கறிகள், உணவுகளை, போதுமான அளவு சாப்பிட வேண்டும். 



    * பயன்படுத்தும், ‘லிப் – பாம்’களில், வெண்ணெய், ‘வைட்டமின் – இ’ அதிகம் இருக்கும் படி பார்த்துக் கொள்வது நல்லது. 

    * சருமத்தின் ஈரப் பதத்தை பராமரிப்பதில், தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்காக, நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதிகளவில் பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொண்டால், நம் உடலின் செயல்பாட்டிற்கான தண்ணீரை, அது வழங்கி விடும். 

    * உப்பு சேர்க்காத வெண்ணெய், தேங்காய் எண்ணெய் உதட்டில் தடவலாம். 

    * சுத்தமான பன்னீரை பஞ்சில் நனைத்து, உதட்டின் மீது அரை மணி நேரம் வைக்கவும். தொடர்ச்சியாக செய்யும் போது, வெடிப்புகள் குணமாகும். கருப்பு நிறம் மறைந்து, இயற்கையான நிறம் மீட்கப்படும். 

    Next Story
    ×