search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தோசைக்கு சத்தான கீரை சட்னி
    X

    தோசைக்கு சத்தான கீரை சட்னி

    கீரையை பொரியல், கூட்டு செய்து சலித்து போனவர்கள் இப்படி கீரையில் சட்னி செய்யலாம். இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட இந்த கீரை சட்னி சூப்பராக இருக்கும்.
    தேவையான பொருட்கள் :

    புதினா - ஒரு கைப்பிடி அளவு,
    பாலக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
    இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
    சாம்பார் வெங்காயம் - 5,
    காய்ந்த மிளகாய்  - ஒன்று,
    உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன்,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    புதினா, பாலக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

    இஞ்சி, சாம்பார் வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.

    புதினா, பாலக்கீரையை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.

    சாம்பார் வெங்காயம், இஞ்சியை பொடியாக நறுக்கி வதக்கிக் கொள்ளவும்.

    உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும்.

    எல்லாம் நன்றாக ஆறியதும் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து மிக்சியில் போட்ட அரைக்கவும்.

    எண்ணெயில் கடுகு தாளித்து சேர்க்கவும்.

    குறிப்பு: இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்றது இந்த சட்னி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×