search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உதட்டின் வறட்சியை போக்கும் இயற்கை வழிகள்
    X

    உதட்டின் வறட்சியை போக்கும் இயற்கை வழிகள்

    பெண்களின் அழகை எடுத்து காட்டுவதில் உதடு முக்கிய பங்கு வகிக்கிறது. வறட்சியால் உதட்டில் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
    தினமும் இரவில் படுக்கும் முன் உதடுகளில் வெண்ணெயை தடவி வந்தால் உதடுகளும் தானாக வறண்டு போகாது, அல்ல‍து காய்ந்து போகாது.

    நமது உதடுகளில் வறட்சி ஏற்படுவதற்கு, அல்ல‍து அடிக்கடி காய்ந்து போவதற்கு நமது உடலின் வெப்ப‍நிலை உயர்ந்து விட்ட‍தன் அறிகுறியே இது.

    ஆகவே உதட்டை நாவினால் வருடி ஈரமாக்குவதை விட உஷ்ணத்தைக் குறைக்கும் மோரை அடிக்கடி நாம் பருகி வர வேண்டும்.

    மேலும் வெண்ணெய் சிறிது எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும். மேலும் ஒவ்வொரு நாள் இரவில் வெண்ணெயைக் கொஞ்சம் உதட்டில் தடவிக்கொண்டு படுக்கைக்கு செல்ல‍ வேண்டும்.

    இவற்றின் காரணமாக நமது உடலில் ஏற்பட்டுள்ள‍ உஷ்ணம் குறையும், உதடுகளும் தானாகவே வறண்டு போகாது, அல்ல‍து காய்ந்து போகாது.
    Next Story
    ×