search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இளமை பொலிவை தக்க வைக்கும் நீர்ச்சத்து நிரம்பிய பழங்கள்
    X

    இளமை பொலிவை தக்க வைக்கும் நீர்ச்சத்து நிரம்பிய பழங்கள்

    நீர்ச்சத்து நிரம்பிய காய்கறிகள், பழ வகைகளை சாப்பிட்டு வருவது தேக ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். இளமை பொலிவை தக்க வைக்கவும் துணை புரியும்.
    நீர்ச்சத்து நிரம்பிய காய்கறிகள், பழ வகைகளை சாப்பிட்டு வருவது தேக ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். இளமை பொலிவை தக்க வைக்கவும் துணை புரியும்.

    * கேரட்டில் 87 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியிருக்கிறது. அதில் மற்ற காய்கறிகள், பழங்களைவிட அதிக அளவில் பீட்டா கரோட்டீன் அடங்கியிருக்கிறது. கேரட்டை தொடர்ந்து சாப்பிட்டு வருவது சருமத்திற்கும், நுரையீரலுக்கும் நன்மை சேர்க்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. வாய்வழி தொடர்புடைய புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவும்.

    * தக்காளி பழத்தை ஜூஸ் போட்டு பருகலாம். அதில் 90 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியிருக்கிறது. அதனை தொடர்ந்து பருகி வந்தால் சருமத்திற்கு புத்துணர்வு கிடைக்கும்.

    * தர்ப்பூசணி பழத்தில் 92 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பி இருப்பதோடு கால் சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. அவை சருமத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.

    * ஸ்ட்ராபெரி பழத்திலும் 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. அவையும் சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ள துணைபுரியும்.

    * ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருவதோடு முதுமையை தள்ளிப் போடவும் உதவும்.

    * ப்ராகோலி 91 சதவீத நீர்ச்சத்தை உள்ளடக்கியது. அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அதனை ஜூஸாகவும் பருகலாம். முதுமையை தடுப்பதில் ப்ராகோலிக்கு முக்கிய பங்கு உண்டு.

    * முள்ளங்கிக்கும் முதுமையை தள்ளிப்போடும் சக்தி உண்டு. அதிலிருக்கும் நீர்ச்சத்துக்களும், வைட்டமின்களும் தேகத்திற்கு பொலிவு சேர்க்கும்.

    * குடைமிளகாய் 92 சதவீத நீர்ச்சத்து நிரம்பியது. வைட்டமின் சி, வைட்டமின் பி6, தையமின், பீட்டா கரோட்டீன் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. கீரைவகைகளும் 90 சதவீதத்துக்கும் மேல் நீர்ச்சத்துகளை கொண்டிருப்பதோடு உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் வைட்டமின்கள், கனிம சத்துக்களையும் கொண்டுள்ளன. அவைகளை தொடர்ந்து சமைத்து சாப்பிட்டு வருவது சருமத்துக்கும், ஆரோக்கியத்துக்கும் நன்மை சேர்க்கும்.
    Next Story
    ×