search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கூந்தல், சரும பிரச்சனையை தீர்க்கும் பப்பாளி
    X

    கூந்தல், சரும பிரச்சனையை தீர்க்கும் பப்பாளி

    இன்றைய பெண்கள், சருமம், கூந்தல் பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். இன்று பப்பாளியை வைத்து கூந்தல், சருமத்தை எப்படி பராமரிப்பது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம் - 1
    உலர்ந்த திராட்சை பழம் - 10

    இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும். அதை பிறகு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையுடன் அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.

    பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள். வெயிலில் முகம் கறுத்துப்போயிருந்தால், பப்பாளியானது பளபளப்பாக மாற்றி விடும்.



    கூந்தல் மாஸ்க் :

    பழுத்த பப்பாளி - ஒரு கப்
    தயிர் - அரை கப்

    பப்பாளியில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. அதோடு விட்டமின்களும் உள்ளது. இவை கூந்தலுக்கு போஷாக்கு அளித்து, பாதிப்பினை சரி செய்கிறது.

    கூந்தலின் அமில காரத் தன்மையையும் சமன் செய்கிறது. தயிர் இயற்கையிலேயே ஈரப்பதத்தை கூந்தலுக்கு அளிக்கிறது. அது ஸ்கால்ப்பில் ஏற்படும் தொற்றுக்களை சரி செய்கிறது.

    பப்பாளியை நன்றாக மசித்து அதனுடன் தயிர் சேர்த்துக் கொள்ளவும். இரண்டையும் கலந்து, ஸ்கால்ப்பில் போடவும். கூந்தல் நுனி வரை போட வேண்டும்.

    30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான நீரில் அலசவும். அடர்த்தி குறைவான ஷாம்புவை உபயோகப்படுத்தவும்.

    வாரம் இரு முறை செய்தால் இரு வாரங்களுக்குள் நுனி பிளவு நின்று கூந்தல் மிருதுவாகும். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
    Next Story
    ×