search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சுருள் முடி இருப்பவர்களின் கவனத்திற்கு
    X

    சுருள் முடி இருப்பவர்களின் கவனத்திற்கு

    சில பெண்களுக்கு கருகருவென முடிகள் அழகாக, சுருளாக இருக்கும். பார்ப்பதற்கு அழகாய் இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் இவர்கள், இத்தகைய முடிகளால் சிரமங்களை அடைவதுண்டு.
    சில பெண்களுக்கு கருகருவென முடிகள் அழகாக, சுருளாக இருக்கும். பார்ப்பதற்கு அழகாய் இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் இவர்கள், இத்தகைய முடிகளால் சிரமங்களை அடைவதுண்டு. இங்கே தரப்பட்டுள்ள குறிப்புகள் சுருள் முடிகளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க உதவுவதுடன், அதனை ஆரோக்கியமாகவும் பாதுகாக்க உதவும்.

    அகன்ற பற்களை கொண்ட சீப்புகளை பயன்படுத்துவதன் மூலம்...நம்முடைய முடிக்கு எந்த ஒரு பங்கமுமின்றி நம்மால் சிக்கலுக்கான தீர்வினை பெற முடியும். சீப்பினை கொண்டு முதலில் சீவி, அதன் பின் நாம் ஹேர் ஸ்ப்ரேக்களை அடிப்பதன் மூலம் உங்கள் கர்லி ஹேர் சிக்கலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் இவர் உறுதியாக கூறுகிறார்.

    இன்று மார்க்கெட்டில் சுருள் முடிக்கென்றே பல விதமான ஷாம்பூ விற்கிறதாம். அதனை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முடிகளின் சிக்கலை போக்கிகொள்ளலாம்.



    உங்கள் முடியை ட்ரை செய்ய டவலை பயன்படுத்துவதற்கு பதிலாக காட்டன் டீ-சர்ட்டை பயன்படுத்துங்கள்.. இந்த வழிமுறையை ஒரு சில தினங்கள் பின்பற்றினாலே போதும்...உங்கள் முடிகளில் ஏற்படும் சிக்கல் பிரச்சனை உங்களை விட்டு தூரம் செல்வதனை நீங்கள் உணரலாம்.

    உங்கள் முடியில் ஏற்படும் சிக்கலுக்கு ஒரு மூலக்காரணமாக இந்த கண்டிஷனர் இருக்க...தூங்க செல்லும் முன் அதனை விட்டு தூர செல்லுங்கள். இந்த இரவு வைத்தியம் உங்களுக்கு பயன்தர, உங்கள் கர்லி ஹேரினை மிருதுவாக வைக்கவும் பவுன்ஸியாக வைக்கவும் இந்த முறை பெரிதும் உதவுகிறது.

    அதனால், இந்த முறையை வாரத்தில் இரண்டு தடவையாவது நீங்கள் செய்து, உங்கள் கர்லி ஹேரினை அழகாகவும்...நீளமானதாகவும் கொண்டு மகிழலாம்.

    உங்கள் கூந்தல் ஈரமாக இருக்க, அப்பொழுது சீப்பினை உபயோகிப்பதன் மூலம் கர்லி ஹேரில் ஏற்படும் லாக்குகளை (சிக்கல்) நம்மால் நிர்வகிக்க முடியும். இந்த ஈரமான கூந்தல் ட்ரை ஆகிவிடாது முடியினை ஈசியாக உடைத்து வேரிலிருந்து வரும் பாலிக்கல்ஸை அது வலுவிலக்க செய்கிறது.

    Next Story
    ×