search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கம்பீர ஆண்களுக்கு கச்சிதமான பிளாட்டின செயின்கள்
    X

    கம்பீர ஆண்களுக்கு கச்சிதமான பிளாட்டின செயின்கள்

    வெள்ளை உலோகமாய் ஜொலிக்கும் பிளாட்டின நகைகளில் ஆண்களுக்கு என அழகிய செயின்கள், பிரேஸ்லெட், மோதிரம் போன்றவை உருவாக்கப்படுகின்றன.
    ஆண்களின் ஆளுமையை, கம்பீரத்தை கூட்டும் வகையில் பிளாட்டின நகைகள் உள்ளன. வெள்ளை உலோகமாய் ஜொலிக்கும் பிளாட்டின நகைகளில் ஆண்களுக்கு என அழகிய செயின்கள், பிரேஸ்லெட், மோதிரம் போன்றவை உருவாக்கப்படுகின்றன. கண்ணை கவரும் அழகிய அற்புத வடிவமைப்பில் விலையுயர்ந்த பிளாட்டின செயின்கள் ஆண்களின் கழுத்தில் தனிசிறப்புடன் ஜொலிக்கின்றன.

    கணினி உதவியுடன், நவீன ஆண்களின் மன விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் அதிநவீன வடிவமைப்புகளில் பிளாட்டின செயின்கள் உலா வருகின்றன.

    இளைஞர்கள் விரும்பும் பிளாட்டின செயின்கள் :

    நவீன கால இளைஞர்கள் கம்பீரத்துடன் காலரை தூக்கி விட்டு நடைபோடும் போது கழுத்தில் கம்பீர வடிவில் ஓர் பிளாட்டின செயின் ஜொலிக்கும் போது அவரின் துள்ளலே அலாதி. பிளாட்டின செயின்கள் தனிகவனத்துடன் ஆண்கள் மனதிற்கு ஏற்றவாறும், அவரின் ஆளுமைக்கு, சற்றும் குறைவு ஏற்படாதவாறு டிசைன் செய்யப்பட்டு உள்ளன. பெரும்பாலும் உருளை அமைப்புகள் இன்றி பட்டையான மற்றும் கம்பி வடிவமைப்பில் பிளாட்டின செயின்கள் உருவாக்கப்படுகின்றன. இவை பெண்கள் அணிகின்ற செயின்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அமைப்பில் உள்ளதால் ஆண்களுக்கு உரிய செயின்கள் என்று குறிப்பிட்ட வடிவமைப்பில் உள்ளன.



    இரட்டை வடிவ பிளாட்டின செயின்கள் :

    பிளாட்டின செயின்கள் ஆண்கள் அணிகின்றவாறு பிரத்யேகமான வடிவமைப்பில் உருவாக்கப்படுகின்றன. அதாவது பெரும்பாலும் இரட்டை வடிவ அமைப்பில் உள்ளன. ஹாலோ அமைப்பிலான கம்பி வளையமும், பட்டையான தகடு இணைப்பும் மாறி மாறி வருவது போன்றும், இருபக்க வட்டவடிவமைப்பும், நடுபகுதி தட்டையான முக்கோண அமைப்பும் கொண்ட இணைப்புகளை நடுநடுவே கம்பி குழல் இணைப்புகள் இணைக்கின்றன செயின்கள் வருகின்றன.

    அத்துடன் சங்கிலி அமைப்பில் பெரிய வளையம் பிறகு சிறுவளையம் என மாறி மாறி உள்ளவாறும் இதிலேயே சிறு வித்தியாசமாய் இரட்டை சாயல் கொண்டவாறு தங்க நிறம் பூசப்பட்டும் செயின்கள் கிடைக்கின்றன. தட்டையான பாதாம் பருப்பு அமைப்பும் அதனை இனைத்த நடுவில் கம்பி வளைய அமைப்பு உள்ளவாறும் இரட்டை வடிவ பிளாட்டின செயின்கள் அழகுடன் உருவாக்கப்பட்டுள்ளன. தட்டையான இணைப்பு சங்கிலி செயின்கள் அற்புதம்.



    ஸ்பிரிங் டைப் பிளாட்டின செயின்கள் :

    ஸ்பிரிங் மாதிரியான உட்புறம் வெற்றிடமாகவும், வெளிப்புறம் விதவிதமான டிசைன்கள் உள்ளவாறும் செயின் வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்டையான ஸ்பிரிங் மற்றும் கயிறு அமைப்பு செயின்கள் வித்தியாசமாக உள்ளன. ஸ்பிரிங் டைப் செயின்களில் இதய வடிவங்கள் ஸ்பிரிங் இணைப்பில் உள்ள செயின் கூடுதல் வனப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    நீள் சதுர இணைப்பு செயின்கள் :

    கம்பிகள், வடிவங்கள் மெல்லிய அமைப்பில் உள்ள செயின்களில் இருந்து இப்புதிய வகை செயின்கள் மாறுப்பட்டுள்ளன. அதாவது நீள் சதுர தகடு வடிவங்கள் இணைப்புகள் தெரியாதவாறு நெருக்கமாய் இணைக்கப்படும், இதன் ஓரப்பகுதி வேறு வடிவமாகவும், நடுப்பகுதி இணைப்பு தெரியாத முக்கோண தகடு இணைத்தவாறு உள்ளது. பழங்கால செயின் அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இப்புதிய அமைப்பு செயின்கள் அதிக கவனத்தை ஈர்க்கின்றன.

    அதுபோல் வட்ட கம்பி இணைப்பின்றி சதுர கம்பி இணைப்புகள், முக்கோண கம்பி அமைப்புகள் மெல்லிய கம்பி அமைப்பின் மீது வரிசையாய் பொருத்தப்பட்டவாறு சாய்வான, செயின்களாக உள்ளன. இவை பிளாட்டின சதுர அட்டைகள் சுருக்கிவிட்டவாறு அற்புதமான தோற்றத்தை தருகின்றன.
    Next Story
    ×