search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்
    X

    கூந்தல் வளர்ச்சிக்கு கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்தலாம்

    மாசு போன்ற பல காரணங்களால் உங்கள் முடியின் வேர்கள் பாதிப்படையும். கறிவேப்பிலையை சீரான முறையில் எடுத்துக் கொண்டால், முடி வளர்ச்சியும் அதிமாகும்.
    நம் முடியின் வளர்ச்சிக்கும் கூட கறிவேப்பிலை வெகுவாக உதவுகிறது. ஆரோக்கியமான மற்றும் பிரகாசமான முடியை பெறுவதற்கு இது மிகவும் உதவுகிறது.

    ரசாயன சிகிச்சைகள், வெப்பமாக்கும் கருவிகள், மாசு போன்ற பல காரணங்களால் உங்கள் முடியின் வேர்கள் பாதிப்படையும். இதனால் முடியின் வளர்ச்சி நின்று கூட போகலாம். பாதிப்படைந்துள்ள வேர்களை சீர் செய்யும் திறனை கொண்டுள்ளது கறிவேப்பிலை. அதற்கு காரணம், அதிலுள்ள அதிமுக்கிய ஊட்டச்சத்துகள். இவை முடிக்கு நல்லதை அளிக்கும். கறிவேப்பிலை பேஸ்ட்டை நேரடியாக தலைச்சருமத்தில் தடவிக் கொண்டால், வேர்களை அது சீர் செய்யும்.

    மேலும் மயிர்த்தண்டுகளின் வலுவை மீண்டும் பெறச் செய்யும். பாதிக்கப்பட்ட முடிக்கு முதலுதவியாக செயல்படும் கறிவேப்பிலை. முடியின் வேர்கள் வலுவடைந்து விட்டால், முடியின் வளர்ச்சியும் வேகம் பிடிக்கும்.

    கறிவேப்பிலையை சீரான முறையில் எடுத்துக் கொண்டால், முடி வளர்ச்சியும் அதிமாகும். கறிவேப்பிலையில் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் கூட வளமையாக உள்ளது. அதனால் அது தலைச்சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும். இறந்து போன தலைச்சரும மயிர்த்தண்டை நீக்கவும், பொடுகை தடுக்கவும் இது உதவும்.



    பதமான கறிவேப்பிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து ஒரு கிண்ணத்தில் போடவும். தேங்காய் எண்ணெய் முடிக்கு நல்லது என்பது கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்திருக்கும். அதனுடன் கறிவேப்பிலை சேரும் போது, முடி வளர்ச்சி அதிகரிக்கும். கருப்பு நிறம் அதிகம் காணும் வரை, இந்த இரண்டையும் கொதிக்க விடவும்.

    அதன் பின், அது குளிர்ந்த பின்னர், அதனை எடுத்து உங்கள் தலைச்சருமத்தில் நேரடியாக தடவிக் கொள்ளவும். ஒரு மணி நேரத்திற்கு அதை அப்படியே விட்டு விடுங்கள். பின் மிதமான ஷாம்புவைக் கொண்டு கழுவுங்கள். இந்த டானிக்கை வாரம் இருமுறை பயன்படுத்தினால், வெறும் 15 நாட்களிலேயே நீங்கள் மாற்றத்தை காணலாம். இந்த முடி டானிக் முடி வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு மட்டுமல்லாது, முடி நரைப்பதையும் தடுக்கும். முடி வளர்ச்சிக்கு கறிவேப்பிலை எண்ணெய்யை பயன்படுத்தும் சிறந்த வழி இதுவே.

    கொஞ்சம் கறிவேப்பிலையை எடுத்துக் கொண்டு பேஸ்ட் ஒன்றை தயார் செய்யுங்கள். இந்த கறிவேப்பிலை பேஸ்ட்டை தயிருடன் கலந்து, முடியின் மீது மசாஜ் செய்யவும். இந்த கலவையை 20-25 நிமிடங்கள் அவரை அப்படியே விட்டு விடுங்கள். பின் மிதமான ஷாம்புவை கொண்டு கழுவுங்கள். இந்த மாஸ்க்கை ஒவ்வொரு வாரமும் தவறாமல் பயன்படுத்தி வந்தால், முடி வளர்ச்சியில் உடனடி பலனை காணலாம். முடி வளர்ச்சி போக, உங்கள் முடியை பளபளப்பாகவும் மென்மையாகவும் இது மாற்றும்.
    Next Story
    ×