search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முகத்திற்கு தக்காளி பேஷியல் செய்வது எப்படி?
    X

    முகத்திற்கு தக்காளி பேஷியல் செய்வது எப்படி?

    கரும்புள்ளி, கருமையும் உங்கள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதா? கவலைப்படாதீர்கள். உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது தக்காளி பேஷியல்.
    கரும்புள்ளி, கருமையும் உங்கள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதா? கவலைப்படாதீர்கள். உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது தக்காளி பேஷியல்.

    உருளைக்கிழங்கு துருவல் சாறு - 1 டீஸ்பூன்,
    தக்காளி விழுது - அரை டீஸ்பூன்

    இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும். ரொம்ப நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்கதாவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும்.

    அவர்களுக்கான ஸ்பெஷல் சிகிச்சை இந்த தக்காளி பேஷியல் ஸ்க்ரப். ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள் இதை நன்றாக முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால், முகம் சூரியனாகப் பிரகாசிக்கும்.
    Next Story
    ×