search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சன்ஸ்க்ரீன் லோஷனை எல்லா சருமத்தினரும் பயன்படுத்தலாமா?
    X

    சன்ஸ்க்ரீன் லோஷனை எல்லா சருமத்தினரும் பயன்படுத்தலாமா?

    ஒவ்வொரு வகை சருமத்துக்கும் ஜெல், லோஷன், மாய்ஸ்ச்சரைஸர், வாட்டர் புரூஃப் என அதற்கேற்ற சன்ஸ்க்ரீன் டைப்பை பயப்படுத்த வேண்டியது அவசியம்.
    வெயிலில் செல்லும்போது புற ஊதாக்கதிர்களால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க, பெண்கள் சன்ஸ்க்ரீனிடம் சரணடைந்தவண்ணம் உள்ளனர். ‘‘ஆனால், ஒவ்வொரு வகை சருமத்துக்கும் ஜெல், லோஷன், மாய்ஸ்ச்சரைஸர், வாட்டர் புரூஃப் என அதற்கேற்ற சன்ஸ்க்ரீன் டைப்பை பயப்படுத்த வேண்டியது அவசியம்’’.

    ‘‘ஆய்லி ஸ்கின், டிரை ஸ்கின், நார்மல் ஸ்கின், அதிகம் வியர்க்கும் சருமம் என இவற்றுக்கு ஏற்ற சன்ஸ்கிரீன் டைப் எது என்பது பற்றிப் பார்ப்போம்.

    இயற்கையாகவே எண்ணெய்ப் பசையுடன் இருக்கும் சருமத்தினர், லைட்டான சன்ஸ்கிரீனையே பயன்படுத்த வேண்டும். அந்த வகையில், ஜெல் டைப் சன்ஸ்கிரீன் இவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ். இந்த ஜெல், ஆய்லி சருமத்தை சற்று குளிர்வித்து நல்ல பலன் தரும்.

    வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு பொதுவாக ஸ்கின் கொஞ்சம் சென்சிட்டிவாக இருக்கும். வெயிலில் இவர்கள் சருமம் மேலும் வறண்டுபோகும். எனவே, இவர்கள் மாய்ஸ்ச்சரைஸருடன் இணைந்த சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது முக்கியம். இதனால் வெயிலில் இருந்து பாதுகாப்பு கிடைப்பதுடன் சருமத்தின் ஈரத்தன்மையும் காக்கப்படும்.

    நார்மல் ஸ்கின் உள்ளவர்கள், லோஷன் டைப் சன்ஸ்கிரீன்கள் பயன்படுத்தலாம். பவுடர்களில் கிடைக்கும் சன்ஸ்க்ரீன் பாதுகாப்பும் இவர்கள் சருமத்தில் சரியாக வேலை செய்யும்.

    இயல்பாகவே அதிகம் வியர்க்கும் சருமம் உள்ளவர்களுக்கு வெயிலில் பாதிப்பு இன்னும் அதிகமாகும். இவர்களுக்கு ஜெல், லோஷன் டைப் சன்ஸ்க்ரீன் விரைவிலேயே கரைந்துவிடும். எனவே, இவர்கள் வாட்டர் புரூஃப் சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம்.
    Next Story
    ×