search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய் எண்ணெய்
    X

    கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் நெல்லிக்காய் எண்ணெய்

    நெல்லிக்காய் எண்ணெயால் தலைமுடி பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும்.
    இன்றைய காலத்தில் தலைமுடிக்கு கிடைக்க வேண்டிய சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காமல், தலைமுடி வலுவிழந்தும், ஆரோக்கியமிழந்தும் உள்ளது. நெல்லிக்காய் எண்ணெயால் தலைமுடி பிரச்சனைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும்.

    தலைமுடி அதிகம் உதிர்ந்தால், ஷாம்புவுடன் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள். இதனால் ஸ்கால்ப் வறட்சியடைந்து, முடி உடைவது தடுக்கப்படும்.

    தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பின், நீரில் சிறிது நெல்லிக்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் தடவி மசாஜ் செய்து பின் அலச வேண்டும். இதனால் முடி பட்டுப் போன்று இருக்கும்.

    தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பின், சிறிது நெல்லிக்காய் எண்ணெயை முடியின் முனைகளில் தடவ வேண்டும். இதனால் முடி வறட்சியடைவதை தடுக்கலாம்.

    நெல்லிக்காய் எண்ணெய் நரைமுடியைப் போக்கும் திறன் கொண்டது. மேலும் பழங்காலத்தில் இருந்து நரைமுடியைப் போக்க நெல்லிக்காய் எண்ணெய் தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆகவே நெல்லிக்காய் எண்ணெயைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து வர, முடி நரைப்பதைத் தடுக்கலாம்.

    பொடுகுத் தொல்லையால் அடிக்கடி அவஸ்தைப்படுபவர்க்ள, நெல்லிக்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், பொடுகு வருவதை முற்றிலும் தடுக்கலாம்.

    நெல்லிக்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தினமும் முடியின் முனைகளில் தடவி வர, பாதிக்கப்பட்ட முடியின் முனைகள் சரிசெய்யப்பட்டு, முடி வெடிப்பது தடுக்கப்படும்.
    Next Story
    ×