search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பொங்கல் ஸ்பெஷல்: கோதுமை ரவா இனிப்பு பொங்கல்
    X

    பொங்கல் ஸ்பெஷல்: கோதுமை ரவா இனிப்பு பொங்கல்

    பொங்கல் பண்டிகைக்கு சர்க்கரை நோயாளிகள் சாப்பிட உகந்த கோதுமை ரவா இனிப்பு பொங்கலை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை ரவை - 1 கப்
    பயத்தம் பருப்பு - 1/4 கப்
    வெல்லம் பொடித்தது - 2 கப்
    நெய் - தேவையான அளவு
    முந்திரி பருப்பு - சிறிது
    காய்ந்த திராட்சை - சிறிது
    ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்  



    செய்முறை :

    வெறும் வாணலியில், கோதுமை ரவை, பயத்தம் பருப்பு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்து கொள்ளவும்.

    வறுத்த ரவா, பருப்பு இரண்டையும் குக்கரில் போட்டு, 3 கப் தண்ணீரைச் சேர்த்து, 5 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அத்துடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். 

    வெல்லம் கரைந்து கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பிலிருந்து எடுத்து, வடிகட்டி வைத்துக் கொள்ளவும். 

    குக்கரை திறந்து, வெந்த ரவா மற்றும் பருப்பை சற்று மசித்து விட்டு, அதில் வெல்ல பாகையும் விட்டு, கிளறி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, பொங்கல் சற்று கெட்டியாக வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.

    கடைசியில் முந்திரி, திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்து போடவும். 

    ஏலக்காய் தூளையும் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கி வைக்கவும்.

    சூப்பரான கோதுமை ரவா இனிப்பு பொங்கல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×