search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான பீட்ரூட் புலாவ்
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான பீட்ரூட் புலாவ்

    குழந்தைகளுக்கு சத்தானது பீட்ரூட். இந்த பீட்ரூட்டை வைத்து எளிய முறையில் சத்தான சுவையான பீட்ரூட் புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    சாதம் - ஒரு கப், 
    பீட்ரூட் துருவல் - ஒரு கப், 
    வெங்காயம் - 1, 
    தக்காளி - 1, 
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், 
    பச்சைமிளகாய் - 3, 
    [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
    புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, 
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, 
    பட்டை - சிறிய துண்டு, 
    கிராம்பு, பிரியாணி இலை - தலா 1, 
    சோம்பு - கால் டீஸ்பூன், 
    நெய் - 2 டீஸ்பூன்.



    செய்முறை : 

    தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    சாதத்தை உதிரியாக வடித்துக்கொள்ளவும். 

    பீட்ரூட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும். 

    கடாயில் எண்ணெய், ஒரு டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். 

    அடுத்து கீறிய பச்சைமிளகாய், [பாட்டி மசாலா] மிளகாய் தூள், துருவிய பீட்ரூட், உப்பு சேர்த்துக் கிளறவும். 

    அடுத்து அதில் புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். நன்றாக சேர்ந்து வந்ததும். உதிராக வடித்த சாதம், ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கிளறவும். 

    அருமையான பீட்ரூட் புலாவ் ரெடி.

    இதற்கு கேரட் தயிர் பச்சடி ருசியாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×