search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சப்பாத்திக்கு அருமையான பஞ்சாபி சோலே மசாலா
    X

    சப்பாத்திக்கு அருமையான பஞ்சாபி சோலே மசாலா

    தோசை, நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள இந்த பஞ்சாபி சோலே மசாலா அருமையாக இருக்கும். இன்று இந்த பஞ்சாபி சோலே மசாலா செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் 

    வெள்ளை கொண்டக்கடலை - ஒரு கப்
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
    [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
    [பாட்டி மசாலா] தனியா தூள் - ஒரு மேசைக்கரண்டி
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - சிறிதளவு
    [பாட்டி மசாலா] கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி
    [பாட்டி மசாலா] சீரக தூள் - அரை தேக்கரண்டி
    [பாட்டி மசாலா] மிளகு தூள் - அரை தேக்கரண்டி
    சுக்கு பொடி - கால் தேக்கரண்டி
    பட்டை, கிராம்பு, ஏலக்காய், மராட்டி மொக்கு - தாளிக்க
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை : 

    வெள்ளை கொண்டக்கடலையை முதல் நாள் இரவே அல்லது குறைந்தது எட்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த சன்னாவை உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்து வைக்கவும்.

    கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு தக்காளியை அரைத்து வைக்கவும், மற்றொன்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். 

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளதை தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் இஞ்சி பூண்டு சேர்த்து வாசம் அடங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். 

    ஐந்து நிமிடம் கழித்து அரைத்து வைத்த தக்காளி விழுது அல்லது டொமேட்டோ சாஸ் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] தனியா தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலா தூள்,
    தேவையான உப்பு (ஏற்கனவே கடலையில் உப்பு சேர்க்கப்பட்டுள்ளது) சேர்த்து வதக்கவும்.

    பொடிகளின் வாசம் அடங்கியதும் வேக வைத்த வெள்ளை கொண்டக்கடலை சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் கழித்து இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து [பாட்டி மசாலா] சீரக தூள்,  [பாட்டி மசாலா] மிளகு தூள், சுக்கு பொடி சேர்த்து கிளறி விடவும். 

    நன்கு கொதித்து கிரேவி சற்று திக்கானதும் இறக்கி கொத்தமல்லி தூவி எலுமிச்சை (தேவையெனில்) பிழிந்து பரிமாறவும். 

    சுவையான பஞ்சாபி சோலே மசாலா ரெடி.


    Next Story
    ×