search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: அரிசி அல்வா
    X

    கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: அரிசி அல்வா

    அரிசியில் அல்வா செய்தால் அருமையாக இருக்கும். இன்று கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக அரிசியை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - கால் கிலோ
    வெல்லம் - கால் கிலோ
    தேங்காய் - 2 கப் 
    ஏலக்காய் தூள் - சிறிதளவு
    முந்திரி பருப்பு - 10
    உலர் திராட்சை - சிறிதளவு
    நெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெல்லத்தை தூளாக்கி கொள்ளவும்.

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    அரிசியை நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து, மாவாக அரைத்துக்கொள்ள வேண்டும். 

    தேங்காய் துருவலில் நீர் விட்டு அரைத்து, பால் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுப்பில் வாணலியை வைத்து, சிறிதளவு நீர் ஊற்றி வெல்லத்தை கொட்டி அது பாகுவாக மாறியதும் வடிகட்டிக்கொள்ள வேண்டும்.

    வெல்ல பாகுவுடன் அரிசிமாவு, தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளற வேண்டும். 

    அவை கொதித்து வந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக நெய்விட்டு கிளற வேண்டும்.

    அதனுடன் முந்திரி பருப்பு, உலர் திராட்சை, ஏலக்காய் தூள் போட்டு கிளற வேண்டும். 

    அரிசி மாவு வெந்ததும் தொடர்ந்து கிளறினால் நிறம் மாறி அல்வா பதத்துக்கு ஒட்டாமல் வரும்.

    சிறிது நேரம் வேக வைத்து அல்வா ஓரளவு கெட்டியானதும் கீழே இறக்கி அகன்ற பாத்திரத்தில் கொட்டி ருசிக்கலாம்.

    சூப்பரான அரிசி அல்வா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×