search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மாலை நேர ஸ்நாக்ஸ் காக்ரா சாட்
    X

    மாலை நேர ஸ்நாக்ஸ் காக்ரா சாட்

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த காக்ரா சாட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    கோதுமை மாவு - ஒரு கப், 
    [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, 
    ஓமம் - ஒரு டீஸ்பூன், 
    அம்சூர் பவுடர் (மாங்காய்தூள்) - அரை டீஸ்பூன், 
    [பாட்டி மசாலா] மிளகுத்தூள் -  - டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] சீரகத்தூள் - டீஸ்பூன், 
    எண்ணெய் - சிறிதளவு, 
    நெய், உப்பு தேவையான அளவு.

    மேலே தூவ :
     
    தக்காளி - ஒன்று 
    வெங்காயம் - ஒன்று,  
    ஓமப்பொடி (ஸ்நாக்ஸ் வகை) - தேவையான அளவு, 
    சாட் மசாலா, உப்பு - சிறிதளவு.



    செய்முறை : 

    தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், ஓமம், அம்சூர் பவுடர்,
    [பாட்டி மசாலா] மிளகுத்தூள், [பாட்டி மசாலா]  சீரகத்தூள்,
    எண்ணெய், உப்பு சேர்த்து நீர் விட்டு, சப்பாத்தி மாவை விட சற்று இறுக்கமாக பிசையவும் (கெட்டியாக பிசைந்துகொள்ளவும்). 

    பிசைந்த மாவை உருண்டையாக உருட்டி, மிகவும் மெல்லிய சப்பாத்தியாக இடவும். 

    கனமான தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய் சிறிதளவு ஊற்றி, சப்பாத்தியைப் போட்டு பொன்னிறமாக சுடவும். பிறகு, மெல்லிய சுத்தமான துணியை சுருட்டி, சப்பாத்தியின் மேல் வைத்து அதன் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது போல் சீராக அழுத்தம் தரவும். சப்பாத்தி பழுப்பு நிறமாகும்போது, திருப்பிப் போடவும். சப்பாத்தி முறுகலாக, மொறுமொறுப்பாக வரும் போது எடுத்து தனியாக வைக்கவும்.

    தட்டில் ஒரு சப்பாத்தியை வைத்து அதன் மீது பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், ஓமப்பொடி, உப்பு, சாட் மசாலா தூவி சாப்பிடலாம். 

    அருமையான சாட் காக்ரா சாட் ரெடி.

    இந்த சப்பாத்தி சில நாட்கள் வரை நன்றாக இருக்கும். சப்பாத்தி மேக்கரிலும் இதை செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×