search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கார்த்திகை வாழைப்பழ அப்பம்
    X

    கார்த்திகை வாழைப்பழ அப்பம்

    கார்த்திகை தீபமான இன்று கடவுளுக்கு வாழைப்பழ அப்பம் படைத்து வழிபடலாம். இன்று இந்த அப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசிமாவு - 1 கப்
    வெல்லப்பொடி - 1/2 முதல் 3/4 கப் வரை
    நன்கு கனிந்த வாழைப்பழம் - 1
    பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன்
    ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு



    செய்முறை :

    1/2 கப் தண்ணீரில் வெல்லத்தைப் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

    வாழை பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.

    அரிசிமாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்ல நீரை விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது நீரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

    ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் ஒரு சிறிய கரண்டி மாவை எடுத்து எடுத்து ஊற்றவும். பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும். இவ்வாறு அனைத்து மாவையும் செய்யவும்.

    சூப்பரான கார்த்திகை வாழைப்பழ அப்பம் ரெடி.

    குறிப்பு: அரிசிமாவிற்குப்பதில், மைதா அல்லது கோதுமை மாவிலும், ரவாவிலும் கூட இந்த அப்பத்தை செய்யலாம். அல்லது எல்லா மாவிலும் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்தும் செய்யலாம். வெல்லத்திற்கு பதில் சர்க்கரையையும் பயன் படுத்தலாம். அப்பம் வெள்ளையாக இருக்கும்.

    மேலும், இதை எண்ணெயில் பொரித்தெடுப்பதற்குப் பதில், குழிப்பணியாரச் சட்டியிலும் பணியாரம் செய்வதுபோல் சுட்டெடுக்கலாம்

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×