search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் வாழைக்காய் சிப்ஸ்
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் வாழைக்காய் சிப்ஸ்

    குழந்தைகளுக்கு சிப்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் வாழைக்காய் சிப்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    வாழைக்காய் - 2
    [மிளகாய் மசாலா] மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி
    பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    முதலில் வாழைக்காய்களை தோலுரித்துக் கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து சிப்ஸ் போடும் பலகையை கடாயின் மேல் வைத்து எண்ணெய் கொள்ளும் அளவுக்கு வாழைக்காயை வட்ட வட்டமாக சீவவும்.

    சீவி முடித்தவுடன் தீயை கூட்டி மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.

    அடுத்து மீதமுள்ள வாழைக்காயையும் இதே முறையில் பொரித்து எடுத்து டிஸ்யூ பேப்பரில் வைக்கவும்.

    சிப்ஸ் நன்றாக ஆறி டிஸ்யூ பேப்பரில் எண்ணெய் உறிஞ்சியவுடன் சிப்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் [மிளகாய் மசாலா] மிளகாய் தூள், பெருங்காயத்தூள், உப்பு எல்லாவற்றையும் கலந்து சிப்ஸின் மேல் தூவி நன்றாக குலுக்கவும்.

    இந்த சிப்ஸை ஒரு காற்றுப் புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.

    சுவையான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.

    குறிப்புக்கள் :

    வாழைக்காய் சிப்ஸை இந்த முறையில் செய்தால் சிப்ஸ் ஒன்றோடு ஓன்று ஒட்டாமல் நல்ல மொறு மொறு என்று வரும்.

    வாழைக்காயை மொத்தமாக வட்டவட்டமாக சீவி ஒரு பேப்பரில் பரப்பி அதன் மேல் உள்ள தண்ணீர் வற்றியவுடன் ஓன்று ஒன்றாக எடுத்து எண்ணெயில் போட்டும் பொரித்து எடுக்கலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×