search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் மசாலா பப்பட்
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் மசாலா பப்பட்

    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மசாலா பப்பட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
    தேவையான பொருட்கள்:

    பப்படம் - 6 (பச்சை மிளகாய் papads பயன்படுத்தப்படுகிறது)
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    [பாட்டி மசாலா] மிளகாய் தூள் - தேவையான அளவு
    சாட் மசாலா - தேவையான அளவு
    [பாட்டி மசாலா] மிளகு தூள் - தேவையான அளவு
    ஓமப்பொடி - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    பப்பட்டில் இரு பக்கங்களிலும் சிறிது எண்ணெய் தெளித்து மைக்ரோ வேவில் வைத்து 50 முதல் 55 வினாடிகளில் பிரவுன் கலர் வந்தவுடன் எடுத்து விடவும்.

    பப்பட்டை ஒரு தட்டில் வைத்து அதன் மேல் கலந்து வைத்துள்ள வெங்காய கலவையை போட்டு அதன் மேல் [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] மிளகு தூள், சாட் மசாலா, ஓமப்பொடி தூவி பரிமாறவும்.

    சுவையான மசாலா பப்பட் ரெடி.

    இதை செய்தவுடன் சாப்பிட்டு விட வேண்டும். இல்லையெனில் நன்றாக இருக்காது. தேவையான பொருட்கள் அனைத்தையும் ரெடியாக வைத்த பின்னரே இதை செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×