search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான கோதுமை அல்வா
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான கோதுமை அல்வா

    அனைவருக்கும் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் கோதுமையை வைத்து அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்
    சர்க்கரை - 2 கப்
    ஏலக்காய் பொடி - 1 டீஸ்பூன்
    முந்திரி - 10
    பாதாம் - 10
    உலர் திராட்சை - 10
    நெய் - 1 கப்
    பால் - 1 கப்



    செய்முறை :

    பாலை நன்றாக காய்ச்சி ஆற வைக்கவும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரை கப் நெய்யை ஊற்றி காய்ந்ததும், அத்துடன் கோதுமை மாவை போட்டு நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.

    நன்றாக வாசனை வரும் போது சிறிது சிறிதாக பால் விட்டு கிளற வேண்டும். (முக்கியமாக கிளறும் போது மாவு கெட்டி கெட்டியாக சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.)

    கிளறும் போது, பாலை மாவு உறிஞ்சும் வரை, தொடர்ந்து 5 நிமிடங்கள் கிளற வேண்டும். பால் ஓரளவு வற்றியதும், அதில் ஏலக்காய் பொடி, சர்க்கரையை போட்டு, சர்க்கரை கரையும் வரை தொடர்ந்து கிளற வேண்டும்

    மாவானது அல்வா பதத்திற்கு வரும் வரை கிடைவிடாமல் கிளறிக்கொண்டே இடைஇடையே மீதமுள்ள அரை கப் நெய்யை சிறிது சிறிதாக சேர்த்து கொண்டே வரவேண்டும்.

    கடைசியாக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அதன் மேல் முந்திரி, பாதாம், உலர் திராட்சை போன்றவற்றை போட்டு அலங்கரித்து இறக்கவும்.

    சூப்பரான கோதுமை அல்வா ரெடி.

    குறிப்பு: பாலை சேர்க்கும் போது, நன்கு காய்ச்சிய பாலை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் பால் வாசனை அல்வாவின் சுவையையே மாற்றிவிடும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×