search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான சீரக புலாவ்
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான சீரக புலாவ்

    உணவில் அதிகளவு சீரகத்தை சேர்த்து கொள்வது குழந்தைகளின் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று சீரக புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 1 கப்,
    வெண்ணெய் அல்லது நெய் - 2 டேபிள்ஸ்பூன்
    சீரகம் - 2 டேபிள்ஸ்பூன்
    பச்சைமிளகாய் - 4
    புதினா - சிறிதளவு
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    வெங்காயம் - 1
    உப்பு - தேவையானது



    செய்முறை :

    பாசுமதி அரிசியை நன்றாக கழுவி இரண்டு கப் தண்ணீரில் 30 நிமிடம் ஊறவைக்கவும்.

    கொத்தமல்லி, புதினா, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயத்தை சிறிது வெண்ணெயில் பொன்னிறமாக வறுத்து வைக்கவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து வெண்ணெய் அல்லது நெய் போட்டு உருகியதும் சீரகத்தை போட்டு பொரிக்க விடவும்.

    சீரகம் பொரிந்தவுடன் அதில் பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவேண்டும்.

    அடுத்து அதில் உப்பு, ஊறவைத்த பாசுமதி அரிசியை தண்ணீருடன் சேர்த்து கொதி வந்தவுடன் குக்கரை மூடி 2 விசில் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும்.

    விசில் போனவுடன் குக்கரை திறந்து பொன்னிறமாக வறுத்த வெங்காயம், சிறிது கொத்தமல்லி, புதினா சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான சீரக புலாவ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×