search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் புருஷெட்டா செய்வது எப்படி?
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் புருஷெட்டா செய்வது எப்படி?

    புருஷெட்டா ஸ்நாக்ஸ் மாலையில் காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும். திடீரென விருந்தினர் வந்து விட்டால் இதை செய்து கொடுத்து அசத்தலாம்.
    தேவையான பொருட்கள் :

    ரஸ்க் - தேவையான அளவு,
    தக்காளி - ஒன்று,
    வெங்காயம் - 1,
    முந்திரி - 5,
    திராட்சை - 10,
    பூண்டு - 2 பற்கள்,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,
    ஆலிவ் எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    சீஸ் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு, மிளகுத்தூள் - தேவைக் கேற்ப.



    செய்முறை :

    தக்காளியை விதை நீக்கி பொடியாக நறுக்கவும்.

    வெங்காயம், பூண்டு, முந்திரி, கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய தக்காளி, பூண்டு, வெங்காயம், முந்திரி, திராட்சை, கொத்தமல்லி, சீஸ் துண்டுகள், ஆலிவ் எண்ணெய், உப்பு, மிளகுத்தூள் போட்டு நன்றாக கலந்து சிறிது நேரம் ஊற விடவும்.

    பரிமாறும்போது இந்தக் கலவையை ரஸ்க் மேல் சிறிதளவு வைத்துப் பரிமாறவும்.ஙங

    மாலையில் சாப்பிட சூப்பராக இருக்கும் இந்த புருஷெட்டா.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×