search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு விருப்பமான பிரெட் ஸ்விஸ் ரோல்
    X

    குழந்தைகளுக்கு விருப்பமான பிரெட் ஸ்விஸ் ரோல்

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் பாக்சில் இந்த பிரெட் ஸ்விஸ் ரோல் செய்து கொடுத்து அனுப்பலாம். இதன் செய்முறையை இன்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஸ்வீட் பிரெட் - 10 ஸ்லைஸ்,
    ஸ்ட்ராபெர்ரி ஜாம் - தேவையான அளவு,
    மாங்கோ ஜாம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    சாக்லேட் ஸ்பிரெட் - ஒரு டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    முதலில் பிரெட்டின் பிரவுன் நிற ஓரங்களை நீக்கிவிடவும்.

    பின்னர் சப்பாத்தி கட்டையால் பிரெட்டை அழுத்தி ரோல் செய்யவும்.

    ஒவ்வொரு பிரெட்டிலும் ஒவ்வொரு விதமான ஜாம், சாக்லேட் ஸ்பிரெட் தடவவும். ஒன்றன் மீது ஒன்றாக பிரெட்டை அடுக்கி சுருட்டவும்.

    பின்னர் படத்தில் உள்ளது போல் வெட்டி தட்டில் வைத்து பரிமாறவும்.

    குழந்தைகளுக்கு இதை ஸ்நாக்ஸ் பாக்சில் வைத்து கொடுத்தால் அத்தனையும் நொடியில் காலியாகும்.

    குறிப்பு:

    சாக்லேட் ஸ்பிரெட் என்பது சாக்லேட் சுவை கொண்ட பேஸ்ட். இதை பிரெட்டின் மீது தடவி சாப்பிடுவார்கள். டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×