search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் கார சோமாஸி
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் கார சோமாஸி

    இனிப்பு சோமாஸ் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காய்கறிகளை வைத்து சூப்பரான ஸ்நாக்ஸ் கார சோமாஸி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 3 கப்,
    ரவை - ஒரு டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.

    மசாலா செய்வதற்கு :

    உருளைக்கிழங்கு - 200 கிராம்,
    கேரட் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    ஊறவைத்த - பச்சைப் பட்டாணி கால் கப்,
    மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா ஒரு சிட்டிகை,
    கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்,
    பெரிய வெங்காயம் - ஒன்று,  
    பச்சை மிளகாய் - 2,
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, ரவை, தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து, 30 நிமிடம் ஊறவிடவும்.

    கழுவி, நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் பச்சைப் பட்டாணியுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குழையாமல் வேகவிடவும்.

    வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி... நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து கேரட் துருவலயும் சேர்த்துக் கிளறி, வெந்த உருளை  பட்டாணி, பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் வதக்கி, கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்து இறக்கவும்.

    பிசைந்த கோதுமை மாவினை சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக இட்டு... 2 டேபிள்ஸ்பூன் மசாலாவை உள்ளே வைத்து மூடி நன்றாக அழுத்தி, சோமாஸிகளாக செய்யவும்.

    கடாயில் எண்ணெயைக் காயவைத்து  செய்துவைத்த சோமாஸிகளை பொரித்து  எடுக்கவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் கார சோமாஸி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×