search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் பாகற்காய் சிப்ஸ்
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் பாகற்காய் சிப்ஸ்

    வாழைக்காய் சிப்ஸ், நேந்திரம் பழ சிப்ஸ் சாப்பிட்டு இருப்பீங்க. பாகற்காய் சிப்ஸ் சூப்பராக இருக்கும். இன்று இந்த சிப்ஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பெரிய பாகற்காய் - 2
    மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    கடலை மாவு - கால் கப்
    சோள மாவு - ஒரு தேக்கரண்டி
    இஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :


    பாகற்காயை மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் மிளகாய்த் தூள், கடலை மாவு, சோளமாவு, இஞ்சி, பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றை போட்டு கலந்து அதனுடன் நறுக்கிய பாகற்காயை சேர்த்து பிசறி வைக்கவும்.

    பிசறிய பாகற்காயை ஒரு தட்டில் பரவலாக வைத்து ஊற வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறிய பாகற்காயை சிறிது சிறிதாக எண்ணெயில் உதிர்த்து விட்டு சிவந்ததும் எடுக்கவும்.

    சுவையான பாகற்காய் சிப்ஸ் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×