search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கர்நாடகா ஸ்டைல் எண்ணெய்க் கத்தரிக்காய்
    X

    கர்நாடகா ஸ்டைல் எண்ணெய்க் கத்தரிக்காய்

    சாதம், தயிர் சாதத்திற்கு அருமையாக இருக்கும் எண்ணெய்க் கத்தரிக்காய். எண்ணெய்க் கத்தரிக்காயை கர்நாடாகா ஸ்டைலில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    குட்டி கத்தரிக்காய் - 6
    சின்ன வெங்காயம் - 10
    புளி - சுண்டைக்காய் அளவு

    அரைக்க :

    வேர்க்கடலை ( நிலக்கடலை) - 1 1/2 மேசைக்கரண்டி
    தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
    மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி (காரத்திற்கேற்ப)
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
    சீரகம் - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு

    தாளிக்க:

    நல்லெண்ணெய் - 4 மேசைக்கரண்டி
    கடுகு - அரை தேக்கரண்டி
    சீரகம் - கால் தேக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கொத்து



    செய்முறை :

    சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.

    சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    புளியை கால் கப் தண்ணீரில் கரைத்து கொள்ளவும்.

    கத்தரிக்காயை காம்பை மட்டும் நீக்கி விட்டு, நான்காக கீறி உப்பு சேர்த்த தண்ணீரில் 10 நிமிடங்கள் போட்டு வைக்கவும்.

    அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் அரை மேசைக்கரண்டி வேர்க்கடலை மட்டும் தனியே எடுத்து வைத்து விட்டு மற்ற பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைக்கவும். பின்னர் எடுத்து வைத்துள்ள வேர்க்கடலையைச் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்து வைத்திருக்கும் மசாலாவை கத்தரிக்காயினுள் நிரப்பி அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். மீதமுள்ள மசாலாவை தனியே வைக்கவும்.

    வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் ஸ்டஃப் செய்த கத்தரிக்காய் சேர்த்து இரண்டு மூன்று நிமிடங்கள் நன்றாக வதக்கி தீயைக் குறைத்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விடவும். இடையிடையே அடிப்பிடிக்காமல் கிளறி விடவும்.

    மீதமுள்ள மசாலாவைச் சேர்த்து, கரைத்து வைத்துள்ள புளிக் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.

    கொதி வந்ததும் தீயைக் குறைத்து வேக விடவும்.

    தண்ணீர் வற்றி காய் குழைய வேகும் வரை(ஆனால் கத்தரிக்காய் உடைந்து விடக்கூடாது) குறைந்த தீயில் கிளறி இறக்கவும்.

    சூப்பரான கர்நாடகா ஸ்டைல் எண்ணெய்க் கத்தரிக்காய் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×