search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தீபாவளி ஸ்பெஷல்: தித்திப்பான பாதுஷா
    X

    தீபாவளி ஸ்பெஷல்: தித்திப்பான பாதுஷா

    அனைவருக்கும் பாதுஷா பிடிக்கும். இந்த தீபாவளிக்கு தித்திக்கும் பாதுஷாவை எப்படி வீட்டிலேயே எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மைதா மாவு - 250 கிராம்,
    வெண்ணெய் - 50 கிராம்,
    பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்,
    பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன்,
    தயிர் - 100 கிராம்,
    சர்க்கரை - 250 கிராம்.



    செய்முறை :

    அகலமான பாத்திரத்தில் மைதா மாவுடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    இதனுடன் வெண்ணெய், தயிர் சேர்த்து மிருதுவாக பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

    சர்க்கரையுடன் மூழ்கும் வரை தண்ணீர் விட்டு பிசுக்கு பாகு காய்ச்சி இறக்கவும்.

    மைதா மாவை சிறிய பந்துகளாக உருட்டி வடை போல தட்டி நடுவே பெரு விரலால் சிறு அழுத்தம் கொடுத்து காய்ந்த எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

    பிறகு பொரித்த பாதுஷாக்களை சர்க்கரை பாகில் சிறிது நேரம் போட்டு எடுத்து பரிமாறவும்.

    தீபாவளி ஸ்பெஷல் தித்திப்பான பாதுஷா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×