search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சப்பாத்திக்கு அருமையான உருளைக்கிழங்கு மசாலா குழம்பு
    X

    சப்பாத்திக்கு அருமையான உருளைக்கிழங்கு மசாலா குழம்பு

    நாண், பூரி, சாதம், தோசை, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த உருளைக்கிழங்கு மசாலா குழம்பு. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நெய் - 2 மேஜைக்கரண்டி
    சீரகம் - 1 தேக்கரண்டி
    உருளைக்கிழங்கு - 4
    தக்காளி - 2
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    மல்லித் தூள் - 1 மேஜைக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    சீரகம் தூள் - 1 தேக்கரண்டி
    கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
    வெந்தயக் கீரை - 1 தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    தக்காளியை அரைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கை வேக வைத்து ஆறியதும் அதன் தோலை நீக்கி லேசாக மசித்துக் கொள்ளவும்

    கடாயில் நெய் அல்லது எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம் சேர்த்து தாளித்த பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். தக்காளியின் பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்

    அடுத்து மசாலா தூள்களை சேர்த்து நன்கு கிளறவும்.

    சிறிதளவு நீர், உப்பு நன்றாக கொதிக்க வைக்கவும்.

    திக்கான பதத்தில் வரும் போது வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் சிம்மில் வைத்து கிளறி விடவும்.

    கடைசியாக காய்ந்த வெந்தய கீரை சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா குழம்பு ரெடி!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×