search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அருமையான சைடிஷ் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்
    X

    அருமையான சைடிஷ் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட்

    மட்டன் சுக்காவைப் போன்றே ருசியாக இருப்பது தான் கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட். இது செய்வது மிகவும் ஈஸி. இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    மட்டன் - அரை கிலோ
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    பொட்டுக்கடலை பவுடர் - 2 டேபிள் ஸ்பூன்

    அரைப்பதற்கு...

    சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
    வர மிளகாய் - 5
    மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி - 1 பெரிய துண்டு
    பூண்டு - 6 பெரிய பற்கள்.



    செய்முறை :

    மட்டனை நீரில் நன்கு கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

    சுத்தம் செய்த மட்டனை  ஒரு பௌலில் போட்டு, அத்துடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிரட்டி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

    பிறகு மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ள வேண்டும்.

    குக்கரில் அரைத்த விழுதினை மட்டனுடன் சேர்த்து நன்கு பிரட்டி, மிக்ஸியில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதனையும் மட்டனுடன் சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

    பின்னர் குக்கரை மூடி அடுப்பில் வைத்து 5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மீண்டும் அடுப்பில் வைத்து, மட்டனில் உள்ள நீர் வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.

    மட்டனில் உள்ள நீரானது வற்றியதும், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த, பின் மட்டனை சேர்த்து 5 நிமிடம் நன்கு பிரட்டி, பின் அதில் பொட்டுக்கடலை பவுடரை சேர்த்து 10 நிமிடம் பிரட்டி இறக்கினால், கேரளா ஸ்டைல் மட்டன் ரோஸ்ட் ரெடி!!!

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×