search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தேங்காய் மசாலா இடியாப்பம் செய்வது எப்படி
    X

    தேங்காய் மசாலா இடியாப்பம் செய்வது எப்படி

    குழந்தைகளுக்கு இடியாப்பம் பிடிக்காது. இடியாப்பத்தை மசாலா சேர்த்து செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    இடியாப்ப மாவு - 2 கப்,
    தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்,
    துருவிய தேங்காய் - 1 கப்,
    கடுகு - 1 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 2,
    உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்,
    பெருங்காயம் - 1 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை - 1 கொத்து,
    உடைத்த முந்திரி - 1 டேபிள்ஸ்பூன்,
    நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கு.



    செய்முறை :

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர், உப்பு, நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விட்டு அடுப்பை நிறுத்தவும்.

    இடியாப்ப மாவினை அதில் கொட்டிக் கைவிடாமல் கிளறி சிறிது ஆறியதும் இடியாப்ப அச்சில் போட்டு இடியாப்பமாக பிழிந்து இட்லித் தட்டில் ஆவியில் 8 நிமிடம் வேகவிட்டு எடுக்கவும்.

    ஆறியதும் உதிர்த்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை தாளித்து, பச்சைமிளகாய், தேங்காய்த்துருவல் போட்டு வறுத்த பின்னர் உதிர்த்த இடியாப்பத்தை சேர்த்து ஒரு முறை புரட்டி சூடாக பரிமாறவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×