search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தித்திப்பான தேங்காய் திரட்டுப்பால் செய்வது எப்படி
    X

    தித்திப்பான தேங்காய் திரட்டுப்பால் செய்வது எப்படி

    திரட்டுப்பால் சாப்பிட்டு இருப்பீங்க. தேங்காய் சேர்த்து திரட்டுப்பால் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த தேங்காய் திரட்டுப்பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முற்றிய முழு தேங்காய் - 2,
    வெல்லம் - 1/2 கிலோ,
    பால் - 400 மி.லி.,
    ஏலப்பொடி - 1 டீஸ்பூன்,
    உடைத்த முந்திரி - 5 டீஸ்பூன்,
    நெய் - தேவையான அளவு
    வறுத்த பாசிப்பருப்பு - 6 டீஸ்பூன்.



    செய்முறை :

    தேங்காயை துருவிக்கொள்ளவும்.

    வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.

    பாசிப்பருப்பை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.

    மிக்சியில் வறுத்த பாசிப்பருப்பு, துருவிய தேங்காயை சேர்த்து கெட்டியாக நைசாக அரைக்கவும்.

    அடிகனமான பாத்திரத்தில் பால், அரைத்த விழுது சேர்த்து வேக விடவும். கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இடையிடையே நெய் சேர்த்துக்கொண்டே இருக்கவும்.

    இப்பொழுது வெந்து தேங்காய் நிறம் மாறி வரும் பொழுது, துருவிய வெல்லத்தை சேர்த்து, இடையிடையே நெய் சேர்க்கவும்.

    அனைத்தும் சேர்ந்து கைகளால் உருட்டும் பதம் வந்ததும் நெய்யில் வறுத்த முந்திரி, ஏலப்பொடி சேர்த்து இறக்கவும்.

    நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும். ஒரு வாரம் வரை கெடாது.

    சூப்பரான தேங்காய் திரட்டுப்பால் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×