search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சப்பாத்திக்கு சூப்பரான ஆலு தால்
    X

    சப்பாத்திக்கு சூப்பரான ஆலு தால்

    சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், தோசைக்கு தொட்டுக்கொள்ள இந்த ஆலு தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஆலு தால் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு - கால் கிலோ,
    பாசிப்பருப்பு - அரை கப்,
    தக்காளி - 2,
    பச்சை மிளகாய் - 50 கிராம்,
    மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,
    சீரகம் - அரை டீஸ்பூன்,
    கரம் மசாலாதூள் - 2 டீஸ்பூன்,
    உப்பு - ருசிக்கேற்ப,
    தனியாதூள் - ஒரு டீஸ்பூன்,
    ஆம்சூர் தூள் அல்லது எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டீஸ்பூன்.
     


    செய்முறை:

    தேவையான தண்ணீர் விட்டு பாசிப் பருப்பை வேகவிடவும்.

    உருளைக்கிழங்கை தோல் நீக்கி துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு, உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு 5 நிமிடம் வறுக்கவும்.

    தனியாதூள், மசாலாதூள், மிளகு, உப்பு சேர்த்து மூடி போட்டு 5 நிமிடம் வதக்கவும். நடுநடுவே கிளறிவிடவும்.

    மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சீரகத்தைப் போட்டு, வெடித்ததும் வெந்த பருப்பைப் போட்டு மேலும் 2 நிமிடம் கொதிக்கவிடவும்.

    அடுத்து அதில் வறுத்த உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து மேலும் 5 நிமிடம் கிளறவும்.

    கலவை கெட்டியானதும், ஆம்சூர் தூளோ அல்லது எலுமிச்சை சாறோ ஊற்றி, ஒரு கிளறு கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான ஆலு தால் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×