search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையான வெஜிடபிள் மசாலா
    X

    தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையான வெஜிடபிள் மசாலா

    பூரி, தோசை, சப்பாத்தி, நாண், புலாவ் போன்றவைகளுக்கு தொட்டுக் கொள்ள இந்த வெஜிடபிள் மசாலா நன்றாக இருக்கும். இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 2 பெரியது
    உருளைக்கிழங்கு - 2 பெரியது
    பச்சைப் பட்டாணி - 2 கைப்பிடி
    நறுக்கிய பீன்ஸ் - 1/2 கப்
    நறுக்கிய கோஸ் - 1 கப்
    காலிபிளவர் - 1/2 கப்
    பெரிய வெங்காயம் - 1
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - 1 டீ ஸ்பூன்
    தனியாத்தூள் - 3 டீ ஸ்பூன்
    மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன்
    கொத்தமல்லி - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    தாளிக்க :

    சோம்பு, பட்டை கிராம்பு, ஏலக்காய்.



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயம், காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

    குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

    அடுத்து அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் சிறிதளவு வதங்கிய பின்னர் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் அதிகம் சேர்க்காமல் திட்டமாக விட்டு குக்கரை மூடி வைக்கவும். வெயிட் போட்டு காய்கறிகள் குழைந்து விடாமல் வேகவைத்து இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து மசாலா பதம் வந்தவுடன் எடுத்து கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான வெஜிடபிள் மசாலா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×