search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான ஸ்நாக்ஸ் ஆலு பன்னீர் கோப்தா
    X

    சூப்பரான ஸ்நாக்ஸ் ஆலு பன்னீர் கோப்தா

    பன்னீர் கோஃப்தா நீளமான வடிவில் பன்னீர், உருளைக்கிழங்கு கொண்டும் செய்யப்படுகிறது. இந்த ஸ்நாக்ஸை சாஸ் அல்லது சட்னியுடன் தொட்டு சாப்பிடலாம்.
    தேவையான பொருட்கள் :

    உருளைக்கிழங்கு  - 2
    பன்னீர் - 100 கிராம்
    ராக் சால்ட் - 2 டேபிள் ஸ்பூன்
    பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
    அரைத்த கருப்பு மிளகு தூள் - 2 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2
    கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
    மக்காச்சோளம் மாவு - 2 டேபிள் ஸ்பூன் (பிரட்டுவதற்கு)
    உலர்ந்த பழங்கள் கலவை (பாதாம், முந்திரி சேர்ந்தது நறுக்கியது) - 1/4 கப் எண்ணெய் - பொரிப்பதற்கு.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து கொள்ளவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பெளலில் போட்டு அதனுடன் பன்னீர் சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்.

    அடுத்து கொஞ்சம் உப்பு மற்றும் பால் பவுடர் சேர்க்கவும்.

    பிறகு நுனிக்கிய மிளகு பொடி, மிளகாய் தூள், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, கொஞ்சம் மக்காச்சோளம் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

    மாவை சரிசமமாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளங்கைகளால் நீள வடிவில் உருட்டவும்.

    உங்கள் கைவிரலால் உருண்டையின் நடுப்பகுதியில் அழுத்தவும்.

    அதன் நடுப்பகுதியில் ஒரு டேபிள் ஸ்பூன் உலர்ந்த பழங்களை சேர்த்து நன்றாக மூடி விட்டு எல்லா பக்கத்தையும் நன்றாக மூடி நீள்வட்ட வடிவில் உருட்டவும்.

    ஒரு தட்டில் மக்காச்சோளம் மாவை பரப்பிக் கொள்ளவும்.

    இப்பொழுது உருட்டிய கோப்தாக்களை மக்காச்சோளம் மாவில் நன்றாக பிரட்டி எடுத்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.

    அடுப்பில் கடாயை வைத்து பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒவ்வொரு கோப்தாக்களாக எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் நன்றாக வேகும் படி நன்றாக திருப்பி விட வேண்டும் பொன்னிறமாக வரும் வரை பொரிக்க வேண்டும்.

    பொன்னிறமானதும் எண்ணெய்யிலிருந்து எடுத்து ஒரு தட்டில் சூடாக வைத்து பரிமாறவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் ஆலு பன்னீர் கோப்தா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×